SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரச குழுவுக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

2019-07-12@ 00:34:29

புதுடெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஜூலை 18ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சமரச குழுவிற்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழுவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதில், ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னை குறித்து பைசாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்திய இக்குழு, கடந்த மே 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில், “அயோத்தி நில பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் பல ஆண்டு பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்கிறோம்’’ என குறிப்பிட்டிருந்தனர். இதனை அடிப்படையாக கொண்டு அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இரு தரப்பிலும் இருக்கும் பிரச்னையை பேசி தீர்க்க சமரச குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் இந்து அமைப்புகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சிங் விஷாரத் கடந்த 9ம் தேதி புதிய கோரிக்கையை முன்வைத்தார். அதில், “பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் முதற்கட்ட பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தற்போதுவரை தெரியவில்லை. சமரச பேச்சு வாரத்தைக்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீதிமன்றம் கூடுதலாக கால அவகாசம் வழங்கியுள்ளதை ஏற்க முடியாது.

அதனால் வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிப்பதாக உறுதியளித்தது. இந்த நிலையில் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அமைப்புகள் தரப்பு வாதத்தில், “சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர அமைக்கப்பட்ட குழு சரியாக செயல்படவில்லை. எனவே வழக்கை விரைவாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து சமரச குழு தரப்பு வாதத்தில், “அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் சமரச குழு மிக சரியான கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்து முதல் இடைக்கால அறிக்கையும் நீதிமன்றத்தில் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பிரச்னையை தீர்க்கத் தான் நாங்கள் சமரச குழுவை நியமித்தோம். அவர்கள் அதனை முடிக்கும் வரை காத்து இருந்திருக்கலாம்’’ என தெரிவித்த நீதிபதிகள், ‘‘அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அடுத்த ஒரு வாரத்தில் அதாவது ஜூலை 18ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை சமரச குழு தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை நடத்தப்பட்ட வாதங்கள, விசாரணைகள், பேச்சு வார்த்தை முன்னேற்றம் ஆகிய அனைத்து விவரங்களும் அதில் தெளிவாக உள்ளடங்கி இருக்க வேண்டும்’’ என்று கூறி வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்