SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரியை காவல்துறை ஆக்கிரமிப்பு: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

2019-07-12@ 00:32:00

சென்னை: சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியை காவல்துறை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவதாக அறப்போர் இயக்கம் சார்பில் குற்றஞ்சாட்டியுள்ளனர். சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியை காவல்துறை ஆக்கிரமிப்பு செய்து குறித்து நேற்று சென்னையில் அறப்போர் இயக்கம் சார்பில் பத்திரிக்கை சந்திப்பு நடைபெற்றது. இதில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், மாநில குழு உறுப்பினர் ஹாரிஸ் சுல்தான் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டாக அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரி 60 ஹெக்டர் பரப்பளவுடையது. இது நீர் வளத்திற்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியை சமூக அமைப்புகளும், தன்னார்வலர்களும் சேர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பு மீட்டெடுத்தார்கள்.ஆனால், இந்த ஏரியின் ஒரு பகுதியை சென்னை காவல்துறை கடந்த மூன்று மாத காலமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அப்பகுதி மக்களுக்கு அது நீர்நிலை இல்லை என்றும், இந்த இடம் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலப்பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு  காவல்துறைக்கு அளிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், இவை அனைத்தும் பொய்யான தகவலாகும் என்று தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் 2015-16ம் ஆண்டுகளில் நீர் நிலைகள் குறித்து அளித்த தீர்ப்புகளில் மிகத் தெளிவாக நீர்நிலைகள் என்பது பொது நம்பிக்கை கொள்கை அடிப்படையில் அரசிடம் உள்ளது என்றும் அது மக்களுக்கான சொத்து என்றும் அது நில பயன்பாட்டை மாற்றும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால் தற்போது தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு 2017ல் சென்னை மாநகராட்சி மூலமாக சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் சிஎம்டிஏவிற்கு மனு அளித்துள்ளார். அதில் 2,400 சதுர மீட்டர் அளவிற்கு சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியின் நீர்நிலை எனும் நில பயன்பாட்டை நிர்வாக உபயோகப் பகுதியாக மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் அளித்துள்ளார்.அதை சிஎம்டிஏ பரிசீலித்து மார்ச் 2010க்குள் ஒப்புதல் அளித்து பயன்பாட்டுக்கு மாற்றியுள்ளனர். எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிஎம்டிஏ மற்றும் காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மூவரும் சட்டவிரோதமாக செயல்பட்டு உள்ளனர்.

தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் இருக்கும் வேலையில் காவல்துறையின் ஆக்கிரமிப்பு செய்வதை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் காவல்துறை ஏரியின் வேலியை உடைத்து ஏரியின் உள்ளே மண்ணை கொட்டி காவல் நிலையம் கட்டி வருகிறது. எனவே காவல்துறை கட்டடம் கட்டுவது உடனே நிறுத்த வேண்டும். சட்டவிரோதமான இந்த நில பயன்பாட்டை பிற பயன்பாட்டுக்கு அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதை தவறும் பட்சத்தில் சட்டரீதியாகவும், மக்களை திரட்டியும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்