SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய, மாநில அரசுகள் தமிழர்களுக்கு விரோதமான திட்டங்களை திணிக்கிறது: வேல்முருகன் குற்றச்சாட்டு

2019-07-12@ 00:31:57

சென்னை: மத்திய மோடி அரசும், மாநில எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழக மக்களுக்கு விரோதமான சட்டங்களையும்,  திட்டங்களையும் திணிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டினார்.மத்திய அரசின் தொடர் தமிழர் விரோத போக்கை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.பின்னர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய மோடி அரசும், தமிழ்நாட்டின் முதல்வர் அடிமை எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழக மக்களுக்கு விரோதமான சட்டங்களையும், திட்டங்களையும் திணித்து வருகின்றன. மக்கள் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை பறித்து வட மாநிலத்தவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்.

தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை, தமிழர்கள் எதிர்க்கும் சட்டங்களையும், திட்டங்களையும் திணித்து வருகின்றனர். இதை அடிமை எடப்பாடி அரசு அனுமதித்துக் கொண்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. அதனால்தான் தமிழர்களாகிய நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் எது குறித்தும் கவலைப்படாமல் தமிழர்களின் கலை, தொன்மை, பண்பாட்டை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக, இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். கோ-பேக் மோடி என்பது எப்படி உலக அளவில் பிரபலமானதோ, அதைப்போல் தமிழக மக்களுக்கு எதிராக, விரோதமாக ஆட்சி நடத்தும் மோடி மற்றும் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்