SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலையில்லா திண்டாட்டத்தை காரணம் காட்டி பணி நியமனத்திற்கு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

2019-07-12@ 00:31:40

சென்னை: வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர், தனக்கு  பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2013ல் அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்வான ஆர்.லக்ஷ்மி பிரபா என்பவர், நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதியாக பி.இ. படிப்பை முடித்திருந்ததால் தேர்வு நடைமுறையிலிருந்து அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டது.இதனை எதிர்த்து லக்ஷ்மி பிரபா தொடர்ந்த வழக்கை  நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அவர் அளித்த உத்தரவு வருமாறு: வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள தமிழகத்தில்,  மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செயல்பாடு மனுதாரரின் உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தேர்வு அறிவிப்பிலேயே கூடுதல் கல்வித்தகுதி உடையவர் பணியிலும் நியமிக்கப்பட்டாலும் நீக்கப்படுவார் என தெரிவித்துள்ளதாக மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இந்த வழக்கில் மெட்டோ ரயில் நிறுவனம் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதைவிட மனுதாரர் கூடுதல் தகுதி பெற்றுள்ளார். எனவே, இந்த பணி நியமனத்தை பொறுத்தவரை கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம்  கோர உரிமையில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்