SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் பாஜவை கண்டித்து நாளை தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

2019-07-12@ 00:31:20

சென்னை: கர்நாடகாவில் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கலைப்பில் ஈடுபடும் பாஜவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நாளை தமிழகத்தில் போராட்டம் நடத்தும் என கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது முதற்கொண்டு அதை சீர்குலைக்கிற வகையில் மத்திய அரசு மூலமாகவோ, கர்நாடக ஆளுநர் மூலமாகவோ பல்வேறு உத்திகளை பா.ஜ.க.வினர் கையாண்டு வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலம் விலை பேசுகிற மலிவான அரசியலை பா.ஜ.க.வினர் மேற்கொண்டனர். மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 13 பேரை பா.ஜ.க.வினர் பல்வேறு உத்திகளை கையாண்டு ராஜினாமா கடிதம் கர்நாடக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கடிதங்களின் அடிப்படையில் ராஜினாமாவை ஏற்க முடியாது, நேரில் கடிதம் கொடுத்து விளக்க வேண்டுமென்று சபாநாயகர் தெளிவாக கூறிவிட்டார்.

இந்நிலையில் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்று நட்சத்திர ஓட்டலில் மகாராஷ்டிர பா.ஜ.க. அரசின் காவல்துறையினரின் பாதுகாப்போடு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அழைத்ததின் பேரில் அவர்களை சந்திக்க நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கக் கூடாது, மத்தியிலும், மாநிலங்களிலும் பா.ஜ. மட்டுமே ஆட்சி செய்ய வேண்டுமென்கிற சர்வாதிகார, பாசிச போக்கில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.   எனவே, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசை குதிரை பேரத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் மூலம் ஜனநாயக படுகொலை செய்து வருகிற பாஜகவை கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்து
நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ்  கட்சி கொறடாவாக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது. பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கான வியூகம் வகுப்பதில் மாணிக்கம் தாகூர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது என்று மற்றொரு அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்