SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜ.வின் செயலை கண்டித்து சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

2019-07-12@ 00:17:46

புதுடெல்லி:  கர்நாடகா, கோவாவில் காங்கிரஸ், கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்களை தன் பக்கம் இழுத்த பாஜ.வை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசை கவிழ்க்க, பாஜ முயன்று வருகிறது. இதற்காக, இக்கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்களை இழுத்து வருகிறது. இதில், காங்கிரசை சேர்ந்த பல எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு, மும்பையில் பாஜ.வின் பாதுகாப்பில் தங்கியுள்ளனர். இதனால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கோவா மாநிலத்திலும் காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏ.க்கள்  பாஜ.வில் இணைந்துள்ளனர். 2 மாநிலங்களிலும் நடந்துள்ள கட்சித் தாவல் மற்றும் குதிரை பேர அரசியலுக்கு பாஜதான் காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பாஜ.வின் இந்த செயலை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் நேற்று  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். காந்தி சிலை அருகே இந்த போராட்டம்  நடத்தப்பட்டது. அப்போது, பாஜ.வுக்கு எதிராகவும், ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’  என்றும் கோஷமிடப்பட்டது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்