SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படுமா?: அரசு விளக்கம்

2019-07-12@ 00:17:35

புதுடெல்லி: தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 542 தொகுதிகளில் 67.11 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது பதிவான 65.95 சதவீத வாக்குகளை விட இது 1.16 சதவீதம் அதிகம். இந்த நிலையில் இந்தியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு மாநிலங்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அமைச்சர், `வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை' என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்