SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

2019-07-12@ 00:17:10

காரைக்கால்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காரைக்காலில் அனுமதிக்க முடியாது என்பதை அடுத்த வாரம், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தவுள்ளேன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  தெரிவித்தார்.காரைக்கால் சேத்தூர் பிரதாப சிம்மேசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று கலந்து கொண்டனர்.பின்னர் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது என்பதை ஏற்கனவே புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமரிடமும் தெரிவித்துள்ளோம். அடுத்த வாரம் மத்திய பெட்ரோலியத்துறை  அமைச்சரை நேரில் சந்தித்து புதுச்சேரி, காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என தெரிவிப்பேன். மாநில அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் தொடர்பான பணிகள் மேற்கொள்ள முடியாது.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து, வரும் 12, 13ம் தேதி புதுச்சேரியில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரசாரம் செய்யவுள்ளோம். 16ம் தேதி புதுச்சேரியில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தவுள்ளோம். காரைக்காலில் அன்றைய  தினம் மாங்கனித் திருவிழா நடைபெறுவதால், வேறொரு நாளில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malta_111

    மால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன

  • egypt_100011

    எகிப்தில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

  • brazil_makkal111

    பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்

  • sculptor_italyyy11

    ரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி!! : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்

  • semmary_aadu_spayin11

    பாரம்பரிய முறைப்படி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற 2000 செம்மறி ஆடுகள் !! : புகைப்படத்தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்