SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 6 மணி முதல் ரயிலில் குடிநீர் வினியோகம்: அதிகாரிகள் தகவல்

2019-07-12@ 00:17:07

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இன்று காலை 6 மணி முதல் ரயிலில் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்ல தமிழக அரசு முடிவு செய்தது.  இதையடுத்து, ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கி.மீ வரை ராட்சத பைப் லைன் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் சோதனை ஓட்டம்  நடத்தப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, 2ம் கட்ட சோதனைக்கு பிறகு தண்ணீரின் வேகத்தை கூட்டுவதற்காக 3 மோட்டாரை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. பின்னர், யார்டில் உள்ள பைப் லைன்களை சுத்தம் செய்து  நேற்று அதிகாலை 1 மணியளவில் ரயில் மூலம் குடிநீர்  ஏற்ற பைப்பில் உள்ள வால்வுகளுக்கு அதிகாரிகள் பூஜை செய்து ரயிலில் குடிநீரை நிரப்பினர். இதில், 50 வேகன்கள் கொண்ட ரயிலில் 27 வேகன்களில் 70 ஆயிரம் கொள்ளளவு தண்ணீர் நிரப்பினர். மீதமுள்ள வேகன்களில் பாதி அளவு தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் தண்ணீர் நிரப்பப்பட்ட வேகன்களை  சோதனை செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு மற்றும் வழித்தடம் குறித்து ஆலோசித்தனர். அப்போது வேகன்கள் முழுமையாக தண்ணீர் இருக்க கூடாது என முடிவு செய்தனர். அதன்படி வேகன்களிலும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரை  குறைக்கும்படி தெரிவித்து, 50 ஆயிரம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் நிரப்பினர்.   இதையடுத்து, ரயில் இன்ஜினை இணைத்து ரயில்வே அதிகாரிகள் தயார் நிலையில் நிறுத்தினர்.

 இதையடுத்து ஜோலார்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக் வர்மா, முதுநிலை பகுதி பொறியாளர் கணேசன் நேற்று மாலை யார்டில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், `நாளை(இன்று) காலை 6 மணியளவில் மெட்ரோ, ரயில்வே மற்றும் தமிழ்நாடு குடிநீர்வாரிய அகாரிகள் குடிநீர் எடுத்து செல்லும் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர். முதல் 2 நாட்களுக்கு சோதனை  ஓட்டமாக, ஒரு நாளைக்கு ஒரு டிரிப் மட்டும் சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். பின்னர் படிப்படியாக டிரிப்கள் அதிகரிக்கப்படும். சென்னை வில்லிவாக்கத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு  வினியோகம் செய்யப்படும் முன்பு 3 முறை பரிசோதிக்கப்படும்’ என்றனர்.

சென்னைக்கு இன்று தண்ணீர்
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு,  கருக்கு உள்ள பகுதிகளில் நேற்று நடந்தது. இப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், `சென்னை மாநகரத்தில் குடிநீர் அதிக அளவில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் சோதனை ஓட்டம் நடந்து  முடிந்துள்ளது. இந்த தண்ணீர் ரயில் மூலம் நாளை (இன்று)  சென்னைக்கு கொண்டு வரப்படும். சென்னை மாநகராட்சி மூலம் 2லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்