SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு?

2019-07-12@ 00:17:06

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தற்போது மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.4 ஆயிரத்து 118 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிக்கு ரூ.901 கோடியும், புதிதாக  தண்டவாளம் அமைப்பதற்கு ரூ.52.29 கோடியும், மாற்று பாதை அமைப்பதற்காக ரூ.245 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் பாதுகாப்பிற்காக ரூ.380.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆளில்லா ரயில்வே கேட் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்காகவும் அதற்காக ரூ.51.87 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தண்டவாளப் பாதைகளை புதுப்பிப்பதற்காக ரூ.918 கோடி  நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.264.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு விதமான ரயில்வே போக்குவரத்து வசதிகளை  மேம்படுத்த ரூ.41.47 கோடி உட்பட பல திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்