SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருளில் மூழ்கியதால் மக்கள் அவதி ராமேஸ்வரம் பகுதியில் 16 மணி நேரம் மின்தடை: சுற்றுலாப்பயணிகளும் அதிருப்தி

2019-07-12@ 00:16:59

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை 16 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. மூன்று நாட்களாக இதே நிலை நீடிப்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து  வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட தீவுப்பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் மின்தடை ஏற்படுவதும், காலையில் மின்சாரம் வருவதுமாக இருந்து வந்தது.  நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 16 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று பகல் ஒரு மணிக்குத்தான் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டதால் புழுக்கத்தில் கொசுக்கடியையும் தாங்கி கொண்டு வீடுகளுக்குள் பொதுமக்கள் தூக்கமின்றி முடங்கினர். வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அவதிப்பட்டனர்.

மின்சாரத்துறையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்கின்றனர். எதனால் மின்தடை ஏற்பட்டது, எப்போது சரியாகும், மீண்டும் எப்போது மின்சாரம் வரும் என்ன பிரச்னை என்பது  குறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகளும் முறையாக தெரிவிக்கவில்லை.இதனால் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போன கரன்ட் எப்போது வருமோ என்று பல மணிநேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அதிகளவில் வந்து செல்லும் ராமேஸ்வரம் பகுதிக்கு தங்குதடையின்றி சீரான மின்சாரம் வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்