SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவாரம்-போடி மாநில நெடுஞ்சாலையில் பராமரிப்பு இல்லாததால் விபத்து அபாயம்

2019-07-11@ 12:13:43

தேவாரம்: தேவாரம்-போடி மாநில நெடுஞ்சாலையில் செல்லும் சாலையில் பராமரிப்பு குறைவால் இரவில் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகிறது.போடி, தேவாரம் அதிகமான கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. தேவாரத்தில் இருந்து போடி செல்லும் சாலை மாநிலநெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக ஏலக்காய் வியாபாரம் செய்பவர்கள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி சரக்குகளை எடுத்து செல்கின்றனர். இதேபோல் தேவாரம்-போடி செல்லும் சாலையில் லட்சுமிநாயக்கன்பட்டி, ராசிங்காபுரம், சில்லமரத்துபட்டி என கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆபத்தான வளைவுகளில் வாகனங்கள் செல்லக்கூடிய நிலை உள்ளது.குறிப்பாக தேவாரத்திலிருந்து போடி செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாக இருப்பதால் தினந்தோறும் செல்லக்கூடிய வாகனங்கள் அதிகமான வேகத்தில் செல்கின்றன.

டூவீலர்கள், கார்கள், தனியார்பஸ்கள் அசுர வேகத்தில் பறக்கின்றன. ஏற்கனவே பலமுறை போடி செல்லும் மாநிலநெடுஞ்சாலையாக உள்ள தே.ஓவுலாபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைசேரி செல்லும் சாலைகளில் வாகனவிபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் உண்டாகி உள்ளன. போடி, தேவாரம், கோம்பை செல்லும் சாலையிலும் விபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வளைவுகளில் விபத்து எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகளோ, ஆபத்தான இடங்கள் என்று குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்ற போர்டுகளோ இல்லை.இதேபோல் இரண்டு புறங்களிலும் உள்ள மரங்களில் ஒளிரும் விளக்குகள் இல்லை. இரவில் வாகனங்களை பிரிக்க போடப்படும் வெள்ளைக் கோடுகளும் இருந்தும் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து வாகனங்களை ஓட்டுபவர்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலைகளை பராமரிக்க தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதால் இரவில் விபத்துக்கள் நடக்கிறது. இதனை தடுத்திட போடி மாநிலநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்துவது அவசியம்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்