SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகபட்ச தண்டனை

2019-07-11@ 06:18:52

இன்று உலகம் இயந்திரமயமாகி விட்டது. எதை எடுத்தாலும் அவசரம். எதிலும் நிதானமின்மை. ஒழுக்கமின்மை அதிகரித்து வருகிறது. இப்போது நாம் உண்ணும் உணவு வரை நேர்மைத்தன்மை இல்லாமல் போய்விட்டது.உணவில் கலப்படம், இன்று தோன்றியதல்ல என்றாலும், அதனால், மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வயிற்று வலி, வாந்தி தொடங்கி புற்றுநோய் வரை உணவு கலப்படத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இயற்கையோடு  இணைந்த உணவு என்று இல்லாமல், அதிக மணம், அதிக சுவை என்று பொதுமக்களும் ஆசைப்படுவதால் அதிக ஆபத்தை தேடுகிறார்கள்.உணவு கலப்படத்தை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பயன் இல்லை. 2018-19ல் உணவு பரிசோதனையில் மூன்றில் ஒரு பங்கு கலப்படம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக 8,100 பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு ரூ.43.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 65 ஆயிரம் உணவு மாதிரிகளில் 20 ஆயிரம் மாதிரிகள் கலப்படம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுகளில் நாட்டில் முதல் இடம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு. இரண்டாம் இடம் தமிழகத்திற்கு என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. கடந்த 2017-18ல் தமிழகத்தில் 7,383 உணவு சோதனையில் 2,461 சோதனைகள் கலப்படம் என்பதும், இதில்  896 பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. 2018-19ல் 5,730 உணவு சோதனையில் 2,601 சோதனையில் கலப்படம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்தாலே தமிழகத்தில் ஆண்டு தோறும் கலப்படத்தின் அளவு  அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. உணவில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் அதிகாரம், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால், அந்த அதிகாரிகள் பதிவு செய்யும் வழக்குகள் மிகவும் குறைவு. வழக்குப்பதிவு செய்தாலும்,  நடவடிக்கை எடுப்பது, இன்னும் குறைவு. பல பிரிவுகளில், குறைந்தபட்ச அபராதம் தான் வசூலிக்கப்படுகிறது.

வீதிக்கு வீதி தெருவுக்கு தெரு புற்றீசல் போல் உணவு விடுதிகள் தொடங்கப்படும் இந்த காலக்கட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி போதுமான உணவுத்தர ஆய்வுக்கூடங்களை அமைத்து, தேவையான விசாரணை அமைப்புகளை உருவாக்கி,  சட்டங்களை கடுமையாக்கினால் தான் உணவில் தரம் உயரும். கலப்படம் குறையும்.உணவில் கலப்படம் செய்வோர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வரையில் சட்டத்தை இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். குறையும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்