SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூர் எலக்‌ஷன்ல கிப்ட் நிற்காத ரகசியத்தை சொல்கிறார்:wiki யானந்தா

2019-07-11@ 00:10:35

‘நீட் விஷயத்தை அரசு மறைச்சு வைத்திருந்தாங்க.. அந்த சிலருக்கு தெரியும்னு நீங்க சொன்னது உண்மையா போச்சு பார்த்தியா... அப்புறம் கிப்ட்  வேலூர் எலக்‌ஷன்ல ஏன் நிற்க தெரியுமா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிப்ட் தரப்பு முதல்ல வேலூர் மக்களைவை ெதாகுதியில் நிற்க தயாராக இருந்தாங்க. குறைந்த பட்சம் 10 சதவீதம் ஓட்டு வாங்கி நம்ம யாருன்னு நிரூபிக்கணும்னு நினைச்சாங்க.. ஆனா அங்க தான் அமலாக்கதுறை, தேர்தல் கமிஷன், வருமான வரித்துறைனு எல்லா அதிகாரிகளையும் களத்தில் இறக்கி விட்டு இருக்காங்க. இந்த சூழலில் நாம் வேட்பாளரை நிறுத்தி அவருக்கு பணம் சப்ளை செய்து மாட்டிக் கொண்டால் பதுக்கி வைத்துள்ள பல கோடிகளும் பறி கொடுக்க வேண்டி இருக்கும்... ஒரு தேர்தலுக்காக பல கோடிகளை இழக்க வேண்டாம். ஒரு பதவிக்காக பதுக்கப்பட்டு இருக்கும் பணத்தை எல்லாம் இழக்க வேண்டாம் என்று சிறைப்பறவை சொன்னதால் தான் இந்த தேர்தல் பின்வாங்கலாம்...’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகர மேட்டர் என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மதுரை, காமராஜர் சாலையில கடந்த மாதம் கூர்நோக்கு இல்லத்தை திறந்தாங்க... இந்த சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கான வாட்ச்மேன், சமையல் உள்ளிட்ட பணிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்து கலெக்டர் மூலம் நியமிக்க அரசு உத்தரவு உள்ளதாம்... இதனை மாவட்ட குழந்தைகள் காப்பக அலுவலர் மூலம் தேர்வு நடத்தி, தேர்ந்து எடுக்க வேண்டுமாம்... இதற்கான தேர்வை எந்த அறிவிப்பும் இல்லாமல் மாவட்ட குழந்தைகள் காப்பக அலுவலர், தனது உறவினர்கள், அலுவலக பணியாளர்களின் உறவினர்கள் என சிலரை மட்டுமே வரவழைத்து, தேர்வு எழுதியது போல் கணக்குக் காட்டினாராம்... 4 பேரையும் தேர்வு செய்திருக்கிறாராம்... ஆட்களை தேர்வு செய்த பட்டியலோடு அதிகாரியும், கலெக்டரிடம் ஒப்புதல் வாங்க சென்றாராம்... அதற்கு கலெக்டர், ‘‘எந்த முன்னறிவிப்புமே செய்யாம ஆட்களை வரவழைத்து, தேர்வையும் நடத்தி முடிச்சுட்டு, தேர்வானவங்க பட்டியலையும் எடுத்துக்கிட்டு என்னிடம் வந்திருக்கீங்களே...’’ என லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாராம்... கையெழுத்து போட போனவர் கடைசி நிமிடத்துல, ‘‘ஆமா... உள்ளூர் அமைச்சர்கிட்ட ஒப்புதல் வாங்கிட்டீங்களா’'''' எனக் கேட்டாராம்... அதற்கு அலுவலர், ‘‘இல்லை’’ எனக்கூற, ‘‘அமைச்சரின் ஒப்புதல் பெற்று வாங்க’’ எனக்கூறி, பைலை திருப்பி அனுப்பி விட்டாராம். தான் தேர்வு செய்த ஆட்களின் பட்டியலோடு, அமைச்சரிடம் ‘தேதி’ கேட்டு, அலுவலர் அலைந்து வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிடிஓக்கள் ெதால்லை தாங்க முடியலையாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘காட்பாடி ஒன்றியத்தில் பணியை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர்கள் இப்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்களாம். காரணம், அங்குள்ள சத்தியத்துக்கு பெயர் போன துணை பிடிஓ ஒப்பந்ததாரர்களை அழைத்து, ‘நீங்கள் பணியை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பணியை முடிக்காவிட்டாலும் பரவாயில்லை’ என்னை முன்கூட்டியே நிறைய கவனித்தால் மட்டும் போதுமானது. நான் பணி முடிந்துவிட்டதாக குறிப்பெழுதி பில்லை பாஸ் செய்து விடுகிறேன் என்று சொல்கிறாராம். அவர் சொல்லியபடியே முன்கூட்டியே கவனித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணியை முடிக்காமலேயே பில்லை பாஸ் செய்து விட்டாராம். இவரது இந்த செயலை தடுக்க முடியாமல் மேலே உள்ள அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்... மக்கள் பணத்தை இப்படி பிடுங்கி சாப்பிடுவதை விட இந்த அதிகாரிகள் ராஜினாமா செய்துட்டு வீட்டில் இருக்கலாம் என்று பாவப்பட்ட மக்கள் பேசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ அரசியல் சப்போர்ட் இருந்தால் பதவிக்கும் பணத்துக்கும் பிரச்னையே இல்லை போல...’’ என்று சூசகமாக கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி மாவட்டத்தில் அதிகார மையமாக வலம் வரும் நிழலானவர் மனது வைத்தால், எதுவும் நடக்கும் என்பது தற்போதும் நிரூபணமாகி இருக்காம். ஆத்தூர் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டருக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவர், இன்ஸ்பெக்டரின் அரஜாகம் குறித்து வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை கிளப்பியது. இதனால் அதிர்ந்து போன, போலீஸ் உயரதிகாரிகளே அவரை  ஊட்டிக்கு மாற்று பணிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எந்த நிலையிலும் மறுபடியும் மாங்கனி மாவட்டத்திற்குள் அவரை கொண்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் சர்ச்ைச இன்ஸ்பெக்டரோ, கண்டிப்பாக நான் சேலத்திற்கு வருவேன் என்று சபதம் போட்டு சென்றாராம். ெசான்னது போலவே, இங்குள்ள ஒரு பட்டிக்கு இன்ஸ்ெபக்டரா வந்திட்டாராம். இது எப்படி சாத்தியம் என்று உயர்காக்கிகள் அண்ணாந்து பார்க்கிறார்களாம். இது என்ன பிரமாதம், நிழலானவரின் ஆசியும், அரவணைப்பும் இருப்பவர்களுக்கு எதுவும் சாத்தியம்தான், என்கின்றனர் விவரம் அறிந்த காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

 • 13-12-2019

  13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • erimalai_11

  தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

 • china_isaai1

  150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

 • german_paanddaa1

  ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்