SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொக்கிஷம் காப்போம்

2019-07-09@ 01:26:40

தமிழகத்தில் உள்ள கோயில்களில் லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இக்கோயில்களில் இருந்து பழமையான சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது. சிலை கடத்தல் என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் மிகப்பெரிய வர்த்தகம். சாதாரணமாக நடந்து விடுவதில்லை சிலை கடத்தல். இதற்காக மிகப்பெரிய நெட்வொர்க் வெளிநாட்டில் செயல்பட்டு வருகிறது. ஒரு கோயிலின் வரலாறு, அங்குள்ள சிலைகளின் பழமை குறித்த தகவல்களை முதலில் இந்த நெட்வொர்க் கேட்டுப் பெறுகிறது. திருப்திகரமாக இருந்தால், சம்பந்தப்பட்ட கோயிலுக்குச் சென்று பார்வையிடுகிறது. கோயிலில் உள்ள பாதுகாப்பம்சங்கள், குறைபாடுகளை கழுகு போல் நோட்டமிடுகிறது.எல்லாமே திருப்தி என்றால், இதற்கென உள்ள ‘குருவிகள்’ மூலம் சிலைகள் கடத்தப்படுகின்றன. கடத்தப்படும் சிலைகள் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றன. சிலைகளின் பழமையை பொறுத்தே விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிலை கடத்தல்கள், அதிகாரிகளின் துணையின்றி சாத்தியமில்லை. சிலை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால், கடத்தலின் ஆதாரப்புள்ளியான நெட்வொர்க்கை முதலில் மடக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகள் எத்தனை என்பதை கண்டறிய தனிக்குழு ஒன்று அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு இன்டர்போல் உதவி கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும். மேலும் அந்த குழு வெளிநாடு சென்று விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கையில் இறங்கி தமிழகம் அழைத்து வரக்கூடிய அதிகாரத்தையும் வழங்கவேண்டும்.பிடிபடும் நபர்கள் வெறும் குருவிகளாக மட்டுமே உள்ளனர். நெட்வொர்க் டீமை பிடித்தால் மட்டுமே எந்தெந்த பகுதிகளில் இருந்து எத்தனை ஆயிரம் சிலைகள் திருடப்பட்டது என்பது தெரிய வரும். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள பழமையான நவபாஷாண முருகன் சிலையை கடத்த சதி நடந்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மொழியில் மட்டும் நாம் முன்னோடி இல்லை. சிற்பத்துறையிலும், கலைநயமிக்க சிலைகளை செய்வதிலும் நாம் தான் முன்னோடி என்பது வரலாற்று உண்மை. நமது பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அந்த கலைநயமிக்க சிலைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்