SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெப்ரானிக்ஸ் தனது தனித்துவமான ஒயர்லெஸ் இயர்ஃபோனான 'ஜெப்-சிம்பொனி' அறிமுகம்

2019-06-28@ 15:57:27

ஜெப்ரானிக்ஸ் தனது தனித்துவமான ஒயர்லெஸ் இயர்ஃபோனான 13 மணி நேரம் பிளேபேக் நேரத்துடன்* கூடிய  'ஜெப்-சிம்பொனி' யை அறிமுகம் செய்கிறது.

ஒயர்லெஸ் கழுத்துப் பட்டை, ஒரு கச்சிதமாகப் பொருந்துகின்ற காதுக்கு-உள்ளே பொருத்தும் வகை இயர்ஃபோன்களுடன் வருகிறது, மேலும் அது மிகச்சிறந்த ஒலிப் பெருக்கத்துடன், சுற்றுப்புற இரைச்சலையும் குறைக்க உதவுகிறது.

இயர்ஃபோன்கள், அவை எவ்வாறு தோற்றமளிக்கின்றன, உணரப்படுகின்றன, மற்றும் ஒலி அளிக்கின்றன என்பதைப் பொறுத்து அமையும்,  ஒரு தனிப்பட்ட விருப்பமாகும். ஒரு ஒயர்லெஸ் இயர்ஃபோனை ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால், அதன் காரணம், அவர் ஒரு முட்டுக்கட்டையான அனுபவத்தில் இருந்து விலகி இருக்க மட்டும் அல்லாமல், கைகளின் உபயோகம் இல்லாமல் அவரின்  இசையை அனுபவிக்க விரும்புவதும் தான். இதில் இன்னொரு விஷயம், ஒரு நீண்ட பேட்டரி ஆயுளைக் கொடுப்பதாகும், ஜெப்-சிம்பொனி அதைத் தான் செய்கிறது.

ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் ஐ.டி சாதனங்கள், ஒலி அமைப்புகள், கைப்பேசி/ வாழ்க்கைமுறை பொருட்கள், மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனையில் முன்னணி நிறுவனம், தனது ஒயர்லெஸ் சாதனங்கள் வரிசையில், குரல்வழி உதவி, மற்றும் 13 மணி நேர இசை ஒலிக்கும் திறனுடன் கூடிய ஜெப்-சிம்பொனி என அழைக்கப்படும், தனது தனித்துவமான இயர்போனை அறிமுகம் செய்திருக்கிறது.

ஒரு அதிகபட்ச சௌகரியமான வடிவத்தை இலக்காகக் கொண்டு, இந்த ஒயர்லெஸ் இயர்ஃபோன்கள், மிகச்சிறந்த நெகிழ்த்திறன் கொண்ட கட்டமைப்புடன், போதுமான ஆதரவை அளிக்கின்ற ஒரு கழுத்துப்பட்டையுடன் வருகிறது.  கழுத்துப்பட்டை மூலப்பொருளானது இலகுவான எடை கொண்டது, மேற்புறத்தில் மென்மையானது, மற்றும் ஸ்பிளாஷ் புரூஃப் கொண்டது. ஜெப் சிம்பொனி, ஒரு இரட்டை ஜோடி அம்சத்தினைத் கொண்டிருக்கிறது, மற்றும் கழுத்துப்பட்டையில் மீடியா, ஒலி அளவுக்கான கட்டுப்பாட்டு பொத்தான்களும்,  மற்றும் கூகுள் மற்றும் சிரி சாதனங்களுக்கு குரல்வழி உதவியையும் கொண்டிருக்கிறது.

இந்த ஒயர்லெஸ் இயர்ஃபோன், கூகுள்/சிரி சாதனங்களுக்கு குரல்வழி உதவி வசதியையும் வழங்குகிறது, எனவே உங்கள் வேட்கையைத் துரத்துங்கள், கேள்விகளைக் கேட்டு, பயணத்தின் போதே அவற்றுக்கான பதிலையும் பெறுங்கள். இன்னும் அதிக பயனருக்கு-எளிமை அனுபவத்தை வழங்குவதற்காக இந்த இயர்ஃபோன், சிக்கல் இல்லாத ஒரு அனுபவத்தை வழங்க வழிவகுக்கும் காந்த சக்தியுள்ள காது பட்டைகளுடன் வருகிறது, மேலும் இதில், பட்டை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டதைக் குறிக்கும் ஒரு முழுமையான பேட்டரி இண்டிகேட்டர் உடன் வருகிறது.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதீப் தோஷி, இயக்குனர், ஜெப்ரானிக்ஸ் கூறுகையில், 'இவை அனைத்தும் பயனாளர்கள் எதிர்நோக்கக் கூடிய ஒரு அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதைப் பற்றியது தான், அது, ஒரு தொந்தரவு-இல்லாத  அனுபவத்துக்காக காந்தத் தன்மையுள்ள காது பட்டைகளை வழங்குவது, குரல்-வழி உதவிக்காக ஒரு பொத்தானைக் கொண்டிருப்பது போன்ற சிறிய விஷயங்களாக இருந்தாலும், அவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அதிக பயனருக்கு-எளிமை அனுபவத்தை அவர்களுக்கு அளித்து. அவர்களின் ஓய்வு நேரத்தை சரியான முறையில் அனுபவிக்க வைக்கின்றன.”

ஜெப் சிம்பொனி இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்