ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் விகாஷ் சவுத்ரி மர்மநபர்களால் சுட்டுக்கொலை
2019-06-27@ 12:41:31

பரிதாபாத்: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விகாஷ் சவுத்ரி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த காங். பிரமுகர் விகாஷ் சவுத்ரி சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஹரியானா மாவட்டம் பரிதாபாத் செக்டார் 9ல் உள்ள சந்தை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர் உடற்பயிற்சி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பும் போது, எதிரே ஒரு காரில் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் விகாஷ் சவுத்ரி மீது சரமாரியாக சுட்டனர். அவரை 6 அல்லது 10 முறை துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 குண்டுகள் உடலை துளைத்து நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்த விகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் விகாஷ் சவுத்ரி சுட்டுக்கொல்லப்பட்டது பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதனைக் கொண்டு மர்மநபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு
இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்: ராகுல் காந்தி
குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் எதிரொலி : ஜப்பான் பிரதமரின் வருகை ரத்து
ரயிலில் ‘பப்ஜி கேம்’ விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதில் கெமிக்கல் குடித்த இளைஞர் பலி
பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, 21 நாளில் துாக்கு தண்டனை : புதிய சட்டத்தை இயற்றியது ஆந்திர அரசு
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்