SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனைக்கு சல்யூட்

2019-06-27@ 12:33:24

அயஸ்வால்: தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை வீடு திரும்பியதும் தாயை கட்டி பிடித்து கதறி அழுதும் காணொலி பலரையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் இருந்து இந்திய மகளிர் அணிக்காக விளையாடி வருகிறார் 19 வயதேயான லால்ரெம் ஸியாமி. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான ஹாக்கி தொடரில், விளையாடி வந்தார். இந்நிலையில் அவரது தந்தை கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

இருந்தும் அணியின் ஒலிம்பிக் கனவை மனதில் வைத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதில்லை என்று அவர் முடிவு எடுத்தார். இறுதியில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி வாகை சூடி, இந்திய மகளிர் ஹாக்கி அணி நாடு திரும்பியது. மிசோரமில் உள்ள வீட்டிற்குச் சென்ற லால்ரெம் ஸியாமியை அவரது தாயார் கட்டி பிடித்து அழும் காட்சிகள் அனைவருக்கும் கண்ணீரை வர செய்தது. தந்தையை இழந்த சோகம் ஒருபுறம் இருந்த போதும் லால்ரெம் ஸியாமியின் நாட்டுப் பற்றை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றன. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நினைவு கூர்ந்து இந்திய அணிக்கு கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்