SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்எல். ஆகியவற்றை மூடும் எண்ணம் இல்லை: மத்திய அரசு தகவல்

2019-06-27@ 12:31:46

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்எல். ஆகியவற்றை மூடும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இவ்விரு நிறுவனங்களையும் மூடும் எண்ணம் இல்லை என மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுத்தப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தொலைத்தொடர்புத் துறையில் உருவாகியுள்ள கடும் போட்டி, ஊழியர்களுக்கான செலவு, 4ஜி சேவைகள் இல்லாமை மற்றும், ஊழியர்களின் அதிகப்படியான சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இவற்றை மீட்டெடுக்க விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், 4ஜி ஒதுக்கீட்டின்போது அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படவில்லை. ஏனென்றால், அரசின் ஆதரவோடு பொதுத்துறை நிறுவனங்கள் போட்டியைச் சீர்குலைக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், சந்தையின் சூழலையும், போட்டியையும் கருத்தில்கொண்டு 4ஜி சேவைகளில் தொடங்குவது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர் செலவைக் காட்டிலும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஊழியர் செலவு மிக அதிகமாக உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களின் சம்பளம், மொத்த வருமானத்தில் 75.06 சதவிகிதம் ஆகவும், எம்.டி.என்.எல் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 87.15 சதவிகிதமாகவும் உள்ளதாக ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களின் சம்பளம், அந்தந்த நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் 2.9 சதவிகிதம் முதல் 5 சதவிகிதம் வரையே உள்ளது. நாங்கள் ஊழியர்கள் மீது கவனம் செலுத்தவும் விரும்புகிறோம். அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் புத்துயிர் கொடுக்க விரும்புகிறோம். பொதுத்துறை நிறுவனங்களை இயக்குவது மிகவும் அவசியம். பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டெழுந்து திறம்பட செயல்பட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காகவும், மறுகட்டமைப்பு செய்வதற்காகவும் திட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய மேலாண்மைக் கழகமும்(அகமதாபாத்), தனியார் ஆலோசனை நிறுவனமான டெலாய்ட்டும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்