SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் ஆலோசனை

2019-06-27@ 12:11:32

காஷ்மீர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சராக, பாஜ தலைவர் அமித் ஷா கடந்த மாதம் பொறுப்பேற்றார். உள்துறை அமைச்சரான பின்னர் முதல் அரசு முறை பயணமாக அவர் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள அவரை மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், அவரது ஆலோசகர்கள் மற்றும் உயரதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பயணத்தின் ஒருகட்டமாக, அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றனர். மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கைவுபாவும் பங்கேற்றார். இந்த நிலையில், 2ம் நாளான இன்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்குடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இத்தகு முன்னதாக, ஜூன் 12 ம் தேதி ஜம்மு காஷ்மீர் அனந்த்நாத் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அர்ஷத் கானின் குடும்பத்தினரை சந்தித்து அமித்ஷா ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்குடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனைக் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்