SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இயக்குனரும், நடிகையுமான விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானார்

2019-06-27@ 11:03:03

ஹைதராபாத்: அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த தெலுங்கு பட பெண் இயக்குநர் காலமானார். பழம்பெரும் நடிகையும் இயக்குனருமான விஜயநிர்மலா உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார். தெலுங்கில் 44 படங்களை இயக்கிய இவருக்கு வயது 73 ஆகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200 திரைப்படங்களில் நடத்துள்ளார். விஜயநிர்மலாவும், சாவித்திரியும் மட்டுமே நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெண் இயக்குநர்கள் ஆவர். சென்னையை சேர்ந்த விஜய நிர்மலா குழந்தை நட்சத்திரமாக திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர். 1950-ல் மச்சரேகை என்ற தமிழ்ப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞான ஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 44 படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். இதனையடுத்து 2008ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக 'ரகுபதி வெங்கையா' விருதினைப் பெற்றுள்ளார். இவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்துவருகிறார். கிருஷ்ணமூர்த்தியை விவாகரத்து செய்த பின், நடிகர் கிருஷ்ணாவை (தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை) திருமணம் செய்துகொண்டார். ஐதராபாத்தில் வசித்துவந்த அவர் நெஞ்சு வலி காரணமாக ஐதராபாத் கச்சுபவுலியில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் மரணமடைந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்