SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளநிலை படிப்புகளில் இந்தி கட்டாயமில்லை..விருப்பமான பாடங்களை பல்கலைக்கழகங்கள் கற்பிக்கலாம்: யு.ஜி.சி விளக்கம்

2019-06-27@ 10:57:29

புதுடெல்லி: இளநிலை படிப்புகளில் இந்தி கட்டாயமில்லை, விருப்பமான பாடங்களை பல்கலைக்கழகங்கள் கற்பிக்கலாம் என்று யு.ஜி.சி விளக்கமளித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என்று தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழியை அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்நிலையில், அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும் இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் முயற்சி குறித்து தகவல்கள் வெளியாகின. நாடு முழுவதும் உயர் கல்வியை நிர்வகிக்கும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) திகழ்ந்து வருகிறது.

அந்த அமைப்பு, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் யு.ஜி.சி. எழுதியுள்ள கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளபடி, இங்கு தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், இந்தி கற்பித்தல் தொடர்பான ஆலோசனைகள், அபிப்பிராயங்கள் பல்கலைக்கழகங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இப்போது கவனப்படுத்த விரும்புவது என்னவென்றால், பல்கலைக்கழகங்கள் யாவும் சுயாட்சி பெற்ற நிறுவனங்களாகும். அவர்கள் தங்கள் அதிகாரவரம்புக்குள் எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்து, எந்த விதத்தில் அதை போதிப்பது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இது, இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சியாக கருதப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகளும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து விவாதிக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சமீபத்தில் முன்வந்தபோது இதை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து வலுக்கட்டாயமாக இந்தி திணிக்கப்படாது என அந்த பல்கலை தெரிவித்தது. இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் யு.ஜி.சி. செயலர் ரஜ்னிஷ் ஜெயின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகள். குறிப்பிட்ட பாடத்தை தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என பல்கலைகள் மீது எந்த கட்டாயமும் விதிக்கப்படவில்லை. யு.ஜி.சி. அனுப்பிய கடிதத்தில் உள்ள அம்சங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதில்லை; விருப்பமிருந்தால் பின்பற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

 • pakistan21

  பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்