SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இந்திய அணியின் காவி நிற சீருடைக்கு எதிர்ப்பு : பாஜக அனைத்திலும் காவியை திணிப்பதாக புகார்

2019-06-27@ 10:55:31

மும்பை ; இந்திய கிரிக்கெட் அணி புதிய ஆரஞ்சு நிற சீருடையில் விளையாடுவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். வரும் 30ம் தேதி இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி புதிய ஆரஞ்சு நிற சீருடையில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சீருடையின் புகைப்படம் வெளியான நாள் முதலே பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றனர்.

மோடி அரசு அனைத்திலும் காவியை திணிக்கப் பார்ப்பதாக குற்றச்சாட்டு

இந்நிலையில் மோடி அரசு அனைத்திலும் காவியை திணிக்கப் பார்ப்பதாக சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அசிம் அஸ்மி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதே போன்று இந்திய அணியின் ஆரஞ்சு சீருடைக்கு காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் குற்றச் சாட்டை பாஜக மறுப்பு


இந்நிலையில் காங்கிரஸ் குற்றச் சாட்டை பாரதிய ஜனதா கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய அணியின் விருப்பமான ஆரஞ்சு நிற சீருடை மீது காங்கிரஸ் கேள்வி எழுப்பினால், காங்கிரஸ் கட்சியின் நாட்டுப்பற்று கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் ஒரே நிறத்திலான சீருடை அணிந்து விளையாடுவதை தவிர்த்து ஏதேனும் ஒரு அணி மாற்று வண்ண சீருடையில் விளையாட, அணிகளை ஐசிசி அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் நீல நிற சீருடையில் விளையாடும் இங்கிலாந்து, பச்சை நிற சீருடையில் விளையாடும் பாகிஸ்தான் அணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அணியின் உடைத் தேர்வு என்பது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளது. உடையைத் தேர்வு செய்யும் பொறுப்பை அந்தந்த நாட்டு கிரிக்கெட் சங்கங்களுக்கே வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நீல நிறத்துடன் ஆரஞ்சு வண்ணம் அதிகம் தெரியும் அளவிலான உடையையே இந்திய அணி அணிய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளில் ஆரஞ்சு நிற கலவையுடன் கூடிய உடையை இந்திய அணி அணிந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண்

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் நேற்று கூறுகையில், ‘எந்த நிற ஜெர்சி அணியப்போகிறோம் என எங்களுக்கு தெரியாது. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டி குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.போட்டியில் கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம். நாங்கள் நீல நிறத்தில்தான் இருக்கிறோம். நீல நிறம்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்