SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால் இறுதியில் நெதர்லாந்து

2019-06-27@ 00:10:08

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. ரவுண்ட் ஆப் 16 போட்டியில் ஜப்பான் அணியுடன் மோதிய நெதர்லாந்து அணி 2 -1 என்ற கோல் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் லைகி மார்டென்ஸ் 17வது மற்றும் 90வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.

ஜப்பான் சார்பில் யுயி ஹேஸ்கவா 43வது நிமிடத்தில் ஒரு கோல்  போட்டார். சிறந்த வீராங்கனை விருதை நெதர்லாந்தின் மார்டென்ஸ் தட்டிச் சென்றார். மற்றொரு கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.29ம் தேதி நடைபெற உள்ள 3வது கால் இறுதிப் போட்டியில் இத்தாலி - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

  • RainInChennai227

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

  • HeatWaveBakesUS

    அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெயில் மற்றும் அனல் காற்று: செயற்கை நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

  • DeraTalibanAttack

    பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்..: 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்