SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குந்துகாலில் குடிநீர் பிரச்னை... மணல் மேடில் ஊற்று தோண்டி தண்ணீர் சேகரிக்கும் பெண்கள்

2019-06-26@ 12:21:20

ராமேஸ்வரம்: பாம்பன் குந்துகால் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருவதால் கடற்கரை பகுதியில் ஊற்று அமைத்து மீனவப்பெண்கள் குடிநீரை சேகரித்து வருகின்றனர். இதனால் குடும்பத்துடன் குடங்களை சுமந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாம்பன் குந்துகால் பகுதியில் குடிநீர் குழாயில் வரும் தண்ணீர் கழிவுநீர் போல் வந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மீனவ பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 150 அடி தூரத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள மணல் திட்டுகளில் ஊற்று தோண்டி தண்ணீரை சேகரித்து எடுத்து வருகின்றனர். இதற்காக குடும்பத்துடன் காலிக்குடங்களை சுமந்து செல்கின்றனர்.

இங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊற்றிலிருந்து சேகரிக்கப்படும் தண்ணீரையே குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மழை இல்லாத நிலையில் பாம்பன் பகுதியில் பல இடங்களில் கிணறுகள் வற்றி தண்ணீர் குறைந்த நிலையில் பொதுமக்கள் பாம்பன் பஞ்சாயத்து நிர்வாகத்தினால் குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குழாயில் வரும் தண்ணீர் கழிவுநீராக வருவதால், பல இடங்களில் போதுமான அளவிற்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். தண்ணீர் சேகரிக்கப்படும் மேல்நிலைத்தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீரை சேகரித்து குழாய் மூலம் வினியோகம் செய்தால் சுத்தமான நீரை பொதுமக்கள் பெற முடியும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய்களில் நல்ல தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்