SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழ்பவானி வாய்க்காலில் தளம் அமைத்தால் 3 மாவட்டம் பாலைவனமாகும்

2019-06-26@ 12:08:39

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 3 மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என சிறு, குறு விவசாயிகள் கூறி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் வங்கி கணக்கில் உச்சவரம்பு இருப்பு தொகையை ரத்து செய்ய வேண்டும். வேறு எவ்வித சேவை கட்டணமும் விதிக்க கூடாது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் சொட்டுநீர் உரங்கள் அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும். கடந்த 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் கடன் பெற்ற மற்றும் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ராசிபுரத்தில் நடப்பாண்டிலேயே மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி, பெருந்துறை, அவல்பூந்துறை ஆகிய பகுதிகளில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும்.
கரும்புக்கான கொள்முதல் விலையை 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பால் கொள்முதல் விலையை 100 சதவீதம் உயர்த்த வேண்டும். குரங்கன்ஓடையில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டு 2 ஆண்டு ஆகிவிட்டது. இதுவரை அதற்கான எந்த ஆய்வு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. உடனடியாக தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி இருக்கும்போதும் ஒரு சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கீழ்பவானி வாய்க்கால் தான். இந்த கால்வாய் பழங்காலத்தில் சிறந்த வல்லுநர்களை கொண்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்களின் உயிர் ஆதாரமாகவும் உள்ளது. எனவே, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது. அவ்வாறு அமைத்தால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு பாலைவனமாக மாறிவிடும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2019

    17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-11-2019

    16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • jet15

    1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

  • amgun

    அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

  • zimbabwe_elephant111

    ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்