SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலட்சிய அதிகாரிகளால் வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்

2019-06-26@ 12:06:10

பரமக்குடி: பரமக்குடி நகர் பகுதியில் ஒருபுறம் குடிக்க தண்ணீர் இல்லாமல் இரவு பகலாக பெண்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் மறுபுறம் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர். ராமநாதபுரம் மாவட்டம் எப்போதுமே வறட்சியான மாவட்டமாகவே வானம் பார்த்த பூமியாக உள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் இல்லாது தமிழகம் முழுவதும் கடும் தண்ணீருக்கு கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பரமக்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால் குடிநீருக்கும், பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக பராமரிப்பு செய்யாமல் விட்டு விட்டதால் முறையாக விநியோகம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சேதமடைந்து பல இடங்களில் தண்ணீர் சாலைகளிலும் வயல்களிலும் வீணாகி வருகிறது. சேதமடைந்த குழாய்களை சரி செய்வதற்காக ஒப்பந்த செய்யப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு அதிகாரிகளை கையில் வைத்துகொண்டு சரி செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால் பரமக்குடி கருணாநிதிபுரம், வேந்தோணி, மணிநகர் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதத்தால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. ஒருபுறம் தண்ணீர் வீணாவதும் மறுபுறம் தண்ணீர் கிடைக்காமல் இரவு பகலாக பெண்கள் காத்திருப்பதும் வடிக்கையாக உள்ளது. கருணாநிதிபுரத்தில் குழாய் உடைப்பால் சேதமடைந்த பல லட்சம் தண்ணீர் வீணாகி வரும் நிலையில் வேந்தோணி பகுதியில் தண்ணீருக்காக காலி குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்கால அடிப்படையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்து வீணாகி வரும் தண்ணீரை பொதுமக்களுக்கு சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்