SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருப்புக்கோட்டையில் குடிநீர் பஞ்சம்: குழாய்களில் கசியும் நீரை வடிகட்டி பிடிக்கும் அவலம்

2019-06-25@ 20:37:18

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் குழாய்களில் கசியும் நீரை வடிகட்டி பிடிக்கும் அவலம் தொடர்கிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகருக்கு வைகை, தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வைகை வறண்டு விட்டதால் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நகர் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் வழங்காததால் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வைத்து பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.  

நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் சரிவர வருவதில்லை. தனியார் லாரி மூலம் வழங்கக்கூடிய குடிநீரின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தண்ணீருக்காக பொதுமக்கள் குடங்களுடன் ஆங்காங்கே அலைந்து திரிகின்றனர். மல்லாங்கிணறு, கல்குறிச்சி, காரியாபட்டிக்கு செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில் தண்ணீர் கசிந்து வருகிறது. கசியும் தண்ணீர் அப்பகுதி பெண்கள் பலமணிநேரம் காத்திருந்து வடிகட்டி பிடித்து செல்கின்றனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில், ‘நகராட்சி மூலம் மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. உடைப்பு ஏற்பட்டு கசியும் தண்ணீரை பல மணிநேரம் காத்திருந்து பிடிக்க வேண்டியுள்ளது. என்று தீருமோ எங்களது தண்ணீர் பஞ்சம்’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

  • 15-01-2020

    15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChennaiBhogi2020

    பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்