SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக்குகளில் மோதுவது போல் வந்து மிரட்டல், செல்போனில் படம் பிடித்து கேலி, கிண்டல்: ஆரல்வாய்மொழியில் மாணவிகளை அச்சுறுத்தும் வாலிபர்கள்

2019-06-25@ 19:55:41

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அரசு பள்ளி அருகே கும்பலாக நின்று கொண்டு மாணவிகளை அச்சுறுத்தும் வாலிபர்கள் மீது  காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆரல்வாய்மொழி வடக்கூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். காலை மற்றும் மாலை வேளையில் பள்ளிக்கு வரும் மாணவிகளை குறி வைத்து வாலிபர்கள் சிலர் கும்பலாக நின்று கொண்டு கேலி, கிண்டல் செய்வது தொடர் கதையாகி உள்ளது. அந்த பகுதியில் பைக்குகளில் நின்று கொண்டு மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போதும், வெளியே வரும் போதும் அதிக வேகத்தில் அலறும் ஹாரனுடன் மாணவிகள் மீது மோதுவது போல் வந்து அச்சுறுத்துகிறார்கள். இதனால் மாணவிகள் பதறி அடித்து சிதறி ஓடுகிறார்கள்.

இந்த பள்ளியையொட்டி உள்ள டியூசன் சென்டர்களில் இருந்து மாணவிகள் இரவில் வீட்டுக்கு செல்லும் போதும் இளைஞர்களின் அட்டகாசம் தொடர்கிறது. பைக்குகளில் வேகமாக வந்து மாணவிகளை அச்சுறுத்துவது அவர்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பதாக உள்ளது. இன்னும் சில வாலிபர்கள், மாணவிகள் செல்லும் போது அவர்களை பின் ெதாடர்ந்து சென்று செல்போனில் படம் பிடிக்கிறார்கள். இது பற்றி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்து, கதறி அழுதுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சிலர் இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நாங்களே ஆள் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். ஹெல்மெட் பிடிக்கவா, சோதனை சாவடிக்கு செல்லவா? புகாரை விசாரிக்கவா? என்று தெரியாமல் திணறுகிறோம். இதில் தனிப்பட்ட முறையில் அந்த பகுதியை மட்டும் கண்காணிக்க முடியாது என்று கூறி கைவிரிக்கிறார்கள். இதனால் வாலிபர்களின் செய்கைகள் தினமும் அத்துமீறி அரங்கேறிய வண்ணம் உள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் சிலர் முறையிட்டுள்ளனர். அப்போது ஆசிரியர்கள், நாங்களும் காவல்துறையிடம் கூறி உள்ளோம். அவர்கள் கண்டுகொள்வதில்லை என தெரிவித்துள்ளனர். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் அந்த பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வாலிபர்களின் செய்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அதிகளவில் ஈவ்டீசிங் அரங்கேறிய காலம் உண்டு. இதனால் மாணவிகள் பாதிக்கப்பட்டு தற்கொலைகளும் நடந்துள்ளன. ஆசிட் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அதன் பின்னர் படிப்படியாக காவல்துறை நடவடிக்கையால் ஈவ்டீசிங் குறைந்து இருந்தது. இப்போது காவல் துறையின் அலட்சியத்தால் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேற தொடங்கி உள்ளன. எனவே விபரீதங்கள் நிகழ்வதற்கு முன் விழிப்புடன் இருந்து காவல்துறை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல்

பள்ளி அருகே நின்று கொண்டு மாணவிகளை கேலி, கிண்டல் செய்வது, பைக்கில் பின் தொடர்ந்து சென்று அச்சுறுத்துவது போன்ற செய்கைகளை மேற்கொள்வதிலும் வாலிபர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாணவிகள் செல்லும் போது, யார் முந்தி செல்வது என்ற ரீதியில் வாலிபர்கள் கோஷ்டியாகவும் மோதி வருகிறார்கள். பொதுமக்களால் இந்த வாலிபர்களை கட்டுப்படுத்த முடிய வில்லை. காவல்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியம் என்பது பெற்றோரின் கோரிக்கை ஆகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்