SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளம் கடற்கரையில் பனைமரங்கள் வளர்க்க ஏற்பாடு: விதை நடும் பணி தொடக்கம்

2019-06-25@ 19:50:51

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரையில் சுமார் 1,500 பனைமர விதைகள் நடப்பட்டன. பள்ளம் கடற்கரையில் கடற்கரை மணல் திட்டுகளை பாதுகாக்கும் வகையிலும், கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும் பனை மரங்கள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பனை மர விதைகள் நடும் பணியில் சூழியல் கல்வியாளர் டேவிட்சன் தலைமையில் இயற்கை விவசாயி ஹென்றி, முன்னாள் விமானப்படை அதிகாரி கிங்ஸ்லி, பொறியாளர்கள் எபின், பிரபு ஆகியோர் ஈடுபட்டனர்.

பனை மரங்கள் நடுவதன் நோக்கம் குறித்து சூழியல் கல்வியாளர் டேவிட்சன் கூறியதாவது: பனை மரங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் பரவலாகவும் காணப்படுகின்றன. பனைமரம் அதிக வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. கற்பகத்தரு எனப்படும் இம்மரம் 100க்கும் அதிகமான பலன்களைத் தருகிறது. உணவுப் பொருளாக பதநீர், கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு, பனங்கிழங்கு ஆகியவற்றைத் தருகிறது. பனை இலைகள் பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக பொருட்களை பொதிய பயன்படுகின்றது. பனை நார் கட்டில் செய்யவும், முதிர்ந்த பனை மரத்தில் வீடு கட்ட தேவையான நிலைகள், கதவுகள், நாற்காலிகள் செய்ய பயன்படுகின்றது. பனை மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தும்புகள் பிரஷ்கள் செய்ய பயன்படுகின்றன.

பனை ஓலையில் பெரிய, சிறிய பெட்டிகள் மற்றும் பயனுள்ள பலவிதமாக பொருட்களை செய்கின்றனர். கடற்கரைகளில் கடல் அலைகளில் இருந்து மண் அரிப்பைத் தடுக்கவும், மழைநீரை சேமித்து வைக்கவும் பனை மரங்கள் இயற்கை அரணாக செயல்படுகின்றன. தென்னை மரத்தை அறிவியல் வாயிலாக குட்டையாக ஆக்கியது, போல் பனை மரத்தையும் குட்டையாக ஆக்கிவிட்டால் வீடுகளிலும், தோட்டங்களிலும் பனை மரத்தை எளிதாக வளர்த்து அதன் பலன்களை முழுமையாகப் பெறலாம். பனை மரத்தின் விதைகளை மழைக்காலத்தில் விதைத்தால் போதும். மீண்டும் தண்ணீர் ஊற்றவோ அல்லது உரம் போடவோ, பூச்சி மருந்து அடிக்கவோ தேவையில்லை. வறட்சியைத் தாக்குப்பிடித்து தானாகவே வளர்ந்து மரமாகும் தன்மையுடையது. எனவே எளிதில் பசுமையை உருவாக்க பயன்தரும் இம்மரத்தை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்