SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டுமான பணிகள் முடிந்து 2 வருடங்கள் ஆகியும் நாகராஜா கோயிலில் பொருட்கள் பாதுகாப்பு அறை திறக்கப்படுமா?

2019-06-25@ 19:49:51

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் பொருட்கள் பாதுகாப்பு அறை, காலணிகள் பாதுகாப்பகம் திறக்கப்படாமல் இருப்பது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. நாகருக்கு என தனி ஆலயம் இங்கு தான் இருக்கிறது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். வெளி மாநில, வெளி நாட்டினரும் அதிகளவில் வருகிறார்கள். பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் சுமார் ரூ.40 லட்சம் செலவில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் காலணிகள் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து சுமார் 2 வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும் இன்னும் இந்த கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தங்களது உடைமைகளை எங்கு வைப்பது என தெரியாமல் திண்டாடுகிறார்கள். ஏற்கனவே இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் செயின் பறிப்பு மற்றும் பொருட்கள் திருட்டுகள் நடந்துள்ளன. இதனால் பக்தர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே கட்டி முடிக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட காலணிகள் பாதுகாப்பகத்தை உடனடியாக திறக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அறநிலையத்துறை  அலுவலர்களிடம் கேட்ட போது, கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது குறித்து, ஏற்கனவே அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் உத்தரவு கிடைத்ததும், விரைவில் இந்த கட்டிடம் திறக்கப்படும் என்றனர்.

பக்தர்களின் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்டு உள்ள கட்டிடம், 2 வருடங்கள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தான் கோயில்களில் பல்வேறு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால் இப்போது ஒரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் திறப்பு விழா நடத்தாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்வது வருவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் நாகராஜா கோயிலுக்கு வருவது வழக்கம். எனவே அதற்கு முன், இந்த கட்டிடங்கள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்