SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்

2019-06-25@ 18:56:35

திருமலை: பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராமிற்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் `ஸ்மார்ட் சங்கர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் கடந்த 2 நாட்களாக ஐதராபாத் சார்மினார் அருகே நடைபெற்று வருகிறது. நேற்று குல்ஜார் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர் ராம் சிகரெட் பிடித்தாராம்.

இதனை பார்த்த சார்மினார் காவல் நிலைய எஸ்ஐ பண்டரி, நடிகர் ராம் மீது 2003 சட்டப்பிரிவு 4ன் படி பொது இடத்திலும், கூட்டம் அதிகம் உள்ள இடத்திலும் சிகரெட் பிடித்ததற்காக ரூ.200 அபராதம் விதித்தார். இதையடுத்து நடிகர் ராம் அபராத தொகையை உடனடியாக செலுத்தினார். இருப்பினும் சினிமா படப்பிடிப்பின் ஒரு காட்சியாக நடிகர் ராம் சிகரெட் பிடித்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதனை போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்கும் காட்சியும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு படக்குழுவினர் தள்ளப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்