SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் வழிப்பறி கொள்ளையன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம்: போலீஸ் அறிவிப்பு

2019-06-25@ 17:28:22

சென்னை: சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்து வரும் நிலையில், வழிப்பறி கொள்ளையன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 10 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சி.சி.டிவி கேமராக்களில் பதிவான மற்ற புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து அதில் உள்ள கொள்ளையனின் விவரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

மேலும்  தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்திருக்கின்றனர். இதை தொடர்ந்து சென்னை முழுவதும் சி.சி.டிவி கேமரா கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையிலும் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்நிலையில் கைது செய்யும் போது முக்கிய குற்றவாளியான ராகேஷ் தப்பித்து ஓட முயற்சி செய்ததாகவும், அப்போது தவறி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்