SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டவிரோத பேனர் வழக்கு: மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டது...உயர்நீதிமன்றம் வேதனை

2019-06-25@ 16:41:25

சென்னை: சட்டவிரோத பேனர் வழக்கில் அரசின் செயல்பாடுகள் நிதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது என சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலை நீடித்தால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை நீதிமன்றத்திற்கு தமிழக அரசு ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசுக்கு கால அவகாசம் வழங்க முடியாது எனவும் கூறினர். அரசு தலைமை வழக்குரைஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்