SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது .. இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

2019-06-25@ 16:29:50

மதுரை: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜ ராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை

தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி ரஞ்சித், ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார்.  இந்த மனு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம்’ என போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. மீண்டும் இவ்வழக்கு கடந்த 21ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யமாட்டோம் என்ற போலீசாரின் உத்தரவாதத்தை நீதிபதி நீட்டிக்க மறுத்து விசாரணையை ஜூன் 24க்கு தள்ளி வைத்தார்.அதன்படி இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால்,  கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்


இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பொதுநிகழ்ச்சிகளில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பா. ரஞ்சித் பேசக்கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனையிட்டுள்ளது. மேலும் சாதிய மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பா. ரஞ்சித் பேசக் கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்