SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு : தமிழகத்தில் இருந்து 25 பேர் பங்கேற்பர் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி

2019-06-25@ 16:12:00

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

தமிழகத்தில் இருந்து  பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார்.  மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மாநாட்டிற்கு வேண்டிய நிதியுதவியை தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  வட அமெரிக்கா தமிழ்ச் சங்கமும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜூலை 4ம் தேதி சிறப்பு பட்டிமன்றம், ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், கங்கை கொண்ட சோழன் இராஜேந்திர சோழன் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது. ஜூலை 5ம் தேதி தமிழ் இசை, கவியரங்கம், இலக்கிய விநாடி வினா நடக்க உள்ளது. அன்று மாலை சிகாகோவில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இயற்கையில் பிறந்த தமிழ் - இசைப்பெரும் நாட்டிய நாடகம் உடக்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்