SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்குவரத்து விதிமீறல் கண்காணிக்க அதிநவீன கேமராக்கள்: சென்னை காவல் ஆணையர்

2019-06-25@ 13:06:01

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களை மீறுபவர்களை படம்பிடிக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்வோர் போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டால் சாலை விதிகளை மீறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதனைத்தடுக்கும் நடவடிக்கைகளில் சென்னை போலீசார் ஈடுபட்டுவருகின்றன.

அண்ணாநகர் பகுதியில் திருமங்கலம் சாந்திகாலனி சந்திப்பு உள்ளிட்ட 5 முக்கிய சந்திப்புக்களில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை படம் பிடிக்கும் அதிநவீன தொழில்நுட்ப கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களையும், கண்காணிப்பு அறைகளையும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

வாகனங்கள் கடந்து செல்லும் போதே கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் விதிகளை மீறும் வாகனஓட்டிகளை காட்டிக்கொடுக்கும். மேலும் வாகன பதிவெண்ணுடன் தகவலை தெரிவிக்கும். அதன் மூலம் உரிமையாளர்களுக்கு அபராத ரசீது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டு 40 ஏஎன்பிஆர் கேமராக்கள் இந்து சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய ஆணையர் விஸ்வநாதன் அண்ணாநகர் பகுதில் ரூ. 2.50 கோடியில் 61 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். வாகனஓட்டிகள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நவீன சிசிடிவிக்களை உருவாக்கி கொண்டுவர ஹூண்டாய் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டதாக மாநகர் முழுவதும் இதுபோன்ற சிசிடிவிக்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் படம் பிடிக்கப்பட்டு வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அபராதத்தொகைக்காண ரசீது அவருக்கு அனுப்பப்படும் என்றார். சாலை விதிகளை கண்காணிக்க காவல்துறையினர் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் வாகன ஓட்டிகள் பொறுப்பை உணர்ந்து விதி முறைகளை 100% சதவீத பின்பற்றினால் விபத்துகளை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்