SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு மீன்வரத்து அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி

2019-06-25@ 13:03:36

சென்னை: நாள் ஒன்றுக்கு 500 டன்கள் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனையாகும் தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமான காசிமேட்டில் மீன்வரத்து அதிகரித்துள்ள அதே வேளையில் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீன் வளத்தை பெருக்க 45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நாட்களில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்ல தடை இருப்பதால் சொற்ப அளவில் கிடைக்கும் ஒருசில மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாகும். இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் பலவகையான மீன்களை அள்ளி வருவார்கள். இதனை போன்று இந்த ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 15ம் தேதி முதல் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர் சென்னை காசிமேடு மீனவர்கள். மேலும் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த இரு நாட்களாக கரை திரும்பி வருகின்றனர். இதை தொடர்ந்து வழக்கத்தை விட இந்த ஆண்டு விதவிதமான மீன்கள் அதிகளவில் கிடைப்பதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்திய கடலில் பிடிக்கும் மீன்களை வெளிநாடுகளில் அதிகளவில் விரும்புவதால் நாள் ஒன்றுக்கு 200 டன்னிலிருந்து 500 டன் எடையுள்ள மீன்கள் வரத்து உள்ள காசிமேடு துறைமுகத்தில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு 2400 கோடி ரூபாய்க்கு மீன் விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து  திருக்கை, பாறை, சூரை, வஞ்சரம் என பெரிய மீன்களும் காடங்கெளுத்தி, கோலா, சங்கரா என பலவகை மீன்களையும் அள்ளி வருகின்றனர் மீனவர்கள். ஆனால் 10 நாட்களுக்கு பிறகு மீன்களை பிடித்து கரை திரும்பும் மீனவர்கள் மீன்கள் வரத்து அதிகமாக இருப்பதாக மகிழ்ச்சி அடைந்தாலும் மிக குறைந்த விலைக்கு விற்பனையாவதால் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்கின்றனர். மேலும் மீன்பிரியர்கள் அதிகளவில் வாங்கி செல்லும் கடம்பா, இறால் போன்றவை அதிகளவில் கிடைக்காததும் விலை சரிவுக்கு காரணம் என்கின்றனர். இதையடுத்து கடந்தாண்டை விட 40 சதவீதம் விலை குறைவாக இந்த ஆண்டு இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்