SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின் ட்...

2019-06-25@ 00:03:31

* காயம் அடைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல், உலக கோப்பையில் எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஸ்ஸல் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சுனில் அம்ப்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 7வது லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் இந்தியாவை எதிர்கொள்கிறது.
* இங்கிலாந்து அணியினர் நேற்று வலைப்பயிற்சி செய்தபோது, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நெட் பவுலராக செயல்பட்டார். இளம் வேகப் பந்துவீச்சாளரான அர்ஜுன் (19 வயது) தற்போது எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

* உலக கோப்பை அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது குறித்து தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளெஸ்ஸி கூறுகையில், ‘இவ்வளவு மோசமாக விளையாடுவோம் என எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் சங்கடமாக உள்ளது. திரும்பத் திரும்ப ஒரே தவறை செய்து வருவதால், மிக சாதாரணமாக அணியாக விளங்குகிறோம். ஜான் ஏறினால் முழம் சறுக்குவது நல்ல அணிக்கு அழகல்ல. எங்கள் வீரர்கள் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்டனர்’ என்றார்.
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக லீக் ஆட்டத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்யத் தவறியதால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் பந்துவீச்சில் தாமதம் செய்தால் வில்லியம்சனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அடுத்த லீக் ஆட்டங்களில் பந்துவீச்சை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்