SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழித்துக் கொள்வோம்

2019-06-25@ 00:01:31

பொதுமக்களின் அடிப்படை தேவை களில் அரசு முன்ெனச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரும் விளைவுகளையும், பாதிப்புகளையும் மக்கள் சந்திக்க நேரிடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னை. தண்ணீருக்காக தமிழகம்  பரிதவித்து வருகிறது. இந்த தலைமுறையே தண்ணீருக்கு இப்படி திண்டாடிக் கொண்டிருக்கிற நிலையில், அடுத்த தலைமுறைக்குஎப்படி தண்ணீர் கிடைக்கும்?உலக மக்கள் தொகை தொடர்பான புள்ளிவிவர அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2027ம் ஆண்டில் மக்கள் தொகையில் இந்தியா, சீனாவை முந்திவிடும். இதன் மூலம் உலகிலேயே அதிகமக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தால் பல்வேறு விபரீத விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, வனவளம் அழிந்து சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில், மக்கள் தொகை  அதிகரித்தால் வாழ்வதே பெரும் சவாலாக மாறிவிடும்.ஒவ்வோர் ஆண்டும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.  விளைநிலங்கள் எல்லாம் பிளாட்களாக மாறி வருகின்றன. விவசாயம் இல்லை என்றால் நமக்கு உணவு எப்படி கிடைக்கும்? மக்கள் தொகை அதிகரித்தால், விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்க  வேண்டும் அல்லது விவசாயம் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலாவது இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் இல்லாவிட்டால் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிப்பது எப்படி?நவீன மருத்துவ வசதிகளால் இறப்பு விகிதம் குறைந்து, பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, சுற்றுச்சூழல்சீர்கேடு, தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை போன்றவை மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்பட்டவை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கல்வி அறிவை அதிகளவில் ஊக்குவிக்க வேண்டும். நகரம் முதல் கிராமங்கள் வரை மக்கள்  தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வீடுகள் கட்டுவதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. அதிகளவு தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பருவநிலை மாறி வருகிறது. எவ்வளவு தான் பொருளாதார வளங்கள்  இருந்தாலும், மக்கள் தொகை அதிகரித்து கொண்டே சென்றால் முன்னேற்றம் காண்பது சிக்கலாகி விடும்.

இயற்கை வளங்கள் குறைந்து மக்கள் தொகை அதிகரித்தால் எப்படி சமாளிப்பது?இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை கண்டிப்பாக தடுக்கவேண்டும். இயற்கை வளங்கள் மீது ‘கை வைத்தால்’ கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் நமது எதிர்காலத்ைத பாதுகாக்கமுடியும். இயற்கை வளங்களை காக்க வேண்டிய  பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உண்டு. தண்ணீர் நமக்கு கற்றுத் தந்த பாடத்தை உணர்ந்து, இயற்கை வளங்களை பாதுகாப்போம்.8 ஆண்டுகள் என்பது குறுகிய காலம்தான். அதற்குள் விழித்துக்கொண்டு மக்கள் தொகையின் பெருக்கத்தை உணர்ந்து அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம், தண்ணீர், தூய்மையான காற்று உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்