SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலந்தாய்வு கண்ணாமூச்சி

2019-06-24@ 01:26:23

கல்வித்துறையில் கலந்தாய்வு என்பது ஆசிரியர்களிடம் பணம் பறிப்பதற்கான அரசின் இன்னொரு அணுகுமுறை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொது கலந்தாய்வின் மூலம் ஆசிரியர்களுக்கு இடமாறுதல்கள் வழங்கப்படுகின்றன. மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் பல மாவட்டங்களில் காலி பணியிடங்கள் கணக்கிலே காட்டப்படுவதில்லை. அரசும், கல்வித்துறை அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடமாறுதல் அளிப்பது வழக்கமாகி விட்டது. ஆசிரியர் பொது கலந்தாய்வில் நடக்கும் மோசடிகள் குறித்து சில வழக்குகள் ஐகோர்ட் படியேறி விசாரணையிலும் இருக்கின்றன.

இவ்வாண்டுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயாரித்துள்ளது. இதன்படி 2 ஆயிரத்து 279 இடைநிலை ஆசிரியர்களும், 17 ஆயிரத்து 147 பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்கள் பணிநிரவல் அடிப்படையில் ஒன்றியம், மாவட்டம் அல்லது வேறு மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட உள்ளனர். இதனால் ஆசிரியர்கள் மத்தியில் இப்ேபாதே கலக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பாட ஆசிரியர்களை கணக்கிடும்போது, தாங்கள் உபரி ஆசிரியராகி விடக்கூடுமோ என்ற அச்சம் ஆசிரியர்களை அதிருப்திக்குள்ளாக்குகிறது.

உண்மையில் தமிழக பள்ளியில் உபரி ஆசிரியர்களை உருவாக்குவது யார்?. அதிலும் அரசையே குற்றம் சாட்ட வேண்டியதுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு வரத்துடிக்கும் ஆசிரியர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி கல்வித்துறை அதிகாரிகள் கல்லா கட்டுகின்றனர். பின்னர் அடுத்த ஆண்டே உபரி ஆசிரியர் பணியிடம் என கணக்கும் காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கை. இதில் இன்னுமொரு கேள்வியும் எழுகிறது. சுமார் 20 ஆயிரம் உபரி ஆசிரியர்கள் தமிழகத்தில் இருக்கும்போது, அரசு  கடந்த மாதம் டிஆர்பி தேர்வுகளை நடத்தியது ஏன்? என்ற கேள்வியும் நியாயமானதே. ஆசிரியர் பணிக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதிய சூழலில், அதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை தமிழக அரசு வாரி சுருட்டி கொண்டது.

இவ்வாண்டு கலந்தாய்வு விதிமுறைகளும் ஆசிரியர்களுக்கு மற்றொரு கடிவாளமே. ஓரிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு இம்முறை விண்ணப்பிக்க முடியும். நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, 5400 பேருக்கு 17பி மெமோ கொடுக்கப்பட்டது. அந்த மெமோ திரும்ப பெறப்பட்டால் மட்டுமே ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய ஊர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியும். ஆசிரிய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் 17பி மெமோ பெற்றதால், கலந்தாய்வில் மறைமுகமாக பழிவாங்கப்படும் சூழலில் உள்ளனர். இவர்களுக்கான பதவி உயர்வும் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. போராட்டத்தை முன்னெடுத்த சங்க நிர்வாகிகளை பழிவாங்க அரசு கலந்தாய்வை ஒரு கருவியாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகங்களும் எழுகின்றன. அங்கன்வாடிகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட அப்பாவி ஆசிரியர்களின் கதியும் அதோ கதிதான். கலந்தாய்வு என்னும் பூதத்தை ஆசிரியர்கள் அச்சத்தோடு எதிர்கொள்ள வேண்டிய தருணமிது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்