SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் மர்ம நபர்கள் அட்டகாசம் பெண் பத்திரிகையாளர் மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: காரில் துரத்தி துரத்தி சுட்டனர்

2019-06-24@ 00:28:31

புதுடெல்லி: காரில் சென்ற பெண் பத்திரிகையாளர் மீது  முகமூடி அணிந்து வந்த 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.நொய்டாவில் உள்ள தனியார் செய்தி சேனலில் பெண் பத்திரிகையாளர் மித்தாலி சந்தேலா பணிபுரிந்து வருகிறார். திருமணமான அவர் தற்போது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.  சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு (நேற்று  அதிகாலை) சொகுசு காரில் அவர் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, அவரது காரை மற்றொரு கார் துரத்தியது. கிழக்கு டெல்லி நியூ அசோக் நகர் அருகே மித்தாலியின் காரை அது முந்த முயன்றது. எனினும், காரை மித்தாலி நிறுத்தவில்லை.

அப்போது, அந்த காரில் இருந்த முகமூடி அணிந்த 2 பேர், மித்தாலி கார் மீது முட்டைகளை வீசினர். பின்னர், காரை வழி மறித்தனர். அதில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த 2 பேரும், மித்தாலி காரின் முகப்பு கண்ணாடி மீது துப்பாக்கியால்  சரமாரி சுட்டுவிட்டு தப்பித்தனர். கண்ணாடியை துளைத்துக் கொண்டு மித்தாலி மீது தோட்டா பாய்ந்தது. வலியால் துடித்த அவர், அந்த வழியே சென்றவர்கள் உதவியுடன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து,  மித்தாலியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.முன் விரோதம், குடும்ப தகராறு, கணவருடன் மோதல் உள்பட அனைத்து கோணங்களிலும் இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்