SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணாமூச்சி ஆட்டம்

2019-06-22@ 01:51:18

உலக அளவில் சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான். அந்த அளவுக்கு இங்கு ஆபரண தேவை மிக அதிகமாக உள்ளது. திருமணம், காது குத்துதல் உட்பட வாழ்வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தங்கம் பின்னிப் பிணைந்திருக்கிறது. முதலீடு செய்ய வாங்குபவர்களை விட, ஆபரணமாக வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம். தேவை அதிகமாக இருப்பதால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க பெடரல் வங்கி கொள்கை முடிவு, டாலர் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, கச்சா எண்ணெய் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

தற்போது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்த்தாததை காரணம் காட்டி தங்கம் விலை இரண்டே நாளில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து விட்டது. நேற்று மாலை சர்வதேச சந்தையில் குறைந்ததும் இங்கும் விலை சற்று குறைந்தது.
சர்வதேச சந்தையில் டாலரை மையமாக வைத்தே வர்த்தகம் நடைபெறுகிறது. எனவேதான் டாலர் மதிப்பு அனைத்து பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கிறது. தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதால் இறக்குமதியை நம்பியிருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம். இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகமாகிறது. ஆனால், வெளிநாட்டவர்கள் ஆபரண தங்கம் வாங்குவதை முதலீடாக கருதுவதில்லை. ஏனெனில், பணத்தின் முழு மதிப்புக்கு தங்கம் கிடைப்பதில்லை. இருப்பினும், அலங்காரம், சமூக அந்தஸ்து, முதலீடு என மக்கள் ஒரு சேர பார்ப்பதால் விலை உயர்ந்தாலும் நம் நாட்டில் விற்பனையை பெரிய அளவில் அது பாதிப்பதில்லை.

இப்படி தங்கத்தை சார்ந்திருக்கும் வாழ்க்கையை மாற்றினால்தான், சர்வதேச சந்தையின் தாக்கம் இந்தியாவில் எதிரொலிக்காமல் செய்ய முடியும். ஆபரண மோகம் அதிகம் உள்ளதால் தங்க பத்திரங்களில் முதலீடு அதிகரிக்கவில்லை.
விவசாயிகள், கிராமப்புற மக்கள் கூட அவசர தேவைக்கு பணம் புரட்டுவதற்காக அவ்வப்போது நகைகளை வாங்கி சேமிக்கின்றனர். மகசூல் அதிகமானாலும் தங்கம் விற்பனை உயர்கிறது. எனவே நாட்டின் பொருளாதாரத்தோடும், கிராமப்புற மக்களோடும் நேரடி தொடர்புடைய தங்கத்தின் சந்தை விலையை ஸ்திரப்படுத்த மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். நகை வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை கொண்டுவரலாம். அதோடு மக்கள் மன நிலையில் கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் தங்கம் விலை குறைவது சாத்தியமாகும். தொழில்துறை தேவையை தவிர பிற வகையில் தங்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்