SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்டர் மாமா : wiki யானந்தா

2019-06-22@ 00:50:04

‘‘என்ன வி ‘‘என்ன விக்கி உடம்பு சரியாகிடுச்சா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அதுல கூட அரசியல் இருக்குது என்ற பேச்சு கோட்டை வட்டாரத்தில் ஓடுது... தேனிக்காரர் டெல்லியில் பேசுற பேச்சு முக்கியத்துவம் பெறக்கூடாது என்பதற்காக தான் தண்ணீர் பற்றிய திடீர் பத்திரிகையாளர் சந்திப்பாம்.. இப்போது டெல்லியில் தேனிக்காரர் எது பேசினாலும் பெரிதாக எடுபடாது. தமிழக தண்ணீர் பிரச்னைதான் பெரிய அளவில் மக்களிடம் பேசப்பட வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட கூட்டமாகவே இது தெரிவதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது... அவர் பேசும்போது கூர்ந்து கவனித்தேன். பெரிதாக எந்த நோயும் இல்லை. ஜஸ்ட் செக்அப் என்றுதான் நினைக்கிறேன்... அப்புறம் தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும்போது மேம்பாலம், சாலைகள், கட்டிடங்கள், பூங்கா இவற்றை திறப்பது தான் முக்கியமா என்று அந்த விழாவில் பங்கேற்ற பொதுமக்களில் சிலர் கொதித்து போயினர்... வீடியோ கான்பரன்சிங் என்பதால் சேலம்காரரை நேரடியாக கேள்வி கேட்க முடியாமல் மனதில் புழங்கியபடி சென்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கேரள விஷயத்தில் தமிழகம் செய்தது சரியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கேரளா தரும் தண்ணீரை யாருக்கென்று பிரித்து தருவது என்பது ஒரு பக்கம் இருந்தாலும்... தமிழக அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி கேரளா ஸ்கோர் செய்வதாக ஒரு தகவல். அப்படி செய்தால் அது கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதகமாகிவிடும் என்பதால் சாத்தியமே இல்லாத வகையில் தினமும் 20 லட்சம் லிட்டர் தர முடியுமா என்று கேட்டு இருப்பது அதற்கு தானாம். எந்த வகையிலும் தமிழகத்தில் கேரளா வழியாக கம்யூனிஸ்ட் தமிழகத்துக்குள் ஊடுருவக்கூடாது என்பதுதான். ஆனால் ஏரிகள், குளங்கள், குட்டைகளில் பாதி ஆக்கிரமிப்புகளை யார் செய்தது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர் தெரியுமா... தமிழக அரசை தான். உதாரணத்துக்கு ஏரிகள், குளங்கள், குட்டைகளை மூடிவிட்டு அதில் கலெக்டர் அலுவலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை கட்டியிருப்பது அரசுதான். அவர்களை தொடர்ந்து தான் கட்சிக்காரர்களும், தனிநபர்களும் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளனர். கோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதாக இருந்தால் முதலில் பல கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை தான் இடித்து அகற்ற வேண்டும். அதனால் நீர்வழித்தட ஆக்கிரமிப்பை இந்த அரசு கண்டுக்காது என்று அரசு துறைகளை சேர்ந்தவர்கள் அடித்து சொல்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனிக்காரருக்கு நல்ல வரவேற்பாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘உண்மைதான். டெல்லிக்காரர் பயங்கர பாலிடிக்ஸ் செய்கிறாராம். ேபாயஸ்கார்டன் அம்மா சுட்டிகாட்டிய தேனிக்காரருக்குதான் தமிழகத்தில் செல்வாக்கு இருக்கு... சிறைபறவை மூலம் பதவியில் உள்ளவருக்கு செல்வாக்கு மக்களிடம் இல்லை. அவரே இரண்டு பேரை பக்கத்தில் வைத்து கொண்டு பணம் கொடுத்து கொண்டு பதவியில் இருக்கிறாரு... எனவே, வரும் தேர்தலில் ஒன்று தனித்து நிற்க வேண்டும். இல்லையென்றால் இலையை இரண்டாக பிளந்து கட்சி சின்னத்தை தேர்தலுக்குள் தாங்கள் நினைக்கும் நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைக்கிறதாம்... அதனால டெல்லிக்கு போன தேனிக்காரர் உற்சாகமாக இருக்கிறாராம். சேலம்காரர் டென்ஷனில் இருந்தாலும் அவருக்கு இரண்டு வருஷம் கியாரண்டி தந்து இருக்காங்களாம்... அதுவரை கரெப்ஷன் இல்லாமல் ஆட்சியை நடத்த அட்வைஸ் கொடுத்தாங்களாம். சேலம்காரருக்கு நோஸ்கட் கொடுக்கவே டெல்லியில் நடந்த கூட்டத்தில் சட்ட அமைச்சரை திருப்பி அனுப்பினாங்களாம்... பதவியில் நிதியை கொடு... பிரசாரத்தை தமிழகம் முழுவதும் தேனிக்காரர் முன்னெடுக்கட்டும். நீங்கள் ஆட்சியில் கவனம் செலுத்துங்க... கட்சியை தேனியிடம் விட்டுவிடுங்கள்... உள்ளாட்சி தேர்தலில் அவர் தலைமையில் கூட்டணி பெரிய வெற்றி ெபற்றால் அப்போது கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பதை பேசுவோம். இப்போதைக்கு இதுதான் எங்கள் நிலைப்பாடு என்று டெல்லி தரப்பு கண்டிப்பாக சொல்லிவிட்டதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்தை பார்த்து ஏன் டெல்லி இப்படி நினைக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சில நாட்களுக்கு முன்பு கிப்ட் தரப்பில் பேசிய விஐபி ஒருவர், இன்னமும் சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிறைபறவையின் போட்டோவை தங்கள் பாக்கெட்டில் வைத்து சுற்றியபடியேதான் இருக்கிறார்கள் என்றார். சிறைப்பறவை வந்தால் இலையின் முக்கிய தலைகள் கண்டிப்பாக அந்தப்பக்கம் சாயும் என்ற நிலை இன்னும் நீடிக்கிறது. இதைதான் கிப்ட்டும் ஸ்லீப்பர் செல் என்று சொல்லி வருகிறார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள சேலம்காரரும் திடீரென சிறைபறவை பக்கம் போனாலும் சொல்வதற்கில்லை. ஆனால் அவர் தலைக்கு மேல் டெல்லி பல கத்திகளை தொங்கி கொண்டு இருக்கிறது எனினும் அவர் சிறைப்பறவை பக்கம் எப்போது போவார் என்பது கணிக்க முடியாது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இங்லீஷ் மீடியம் தமிழ் மீடியம் மோதல் நீடிப்பதாக சொல்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுப்பதில்லையாம். மாணவர்கள் கேட்டால் என்னை தமிழ் வழிக்கு பாடம் எடுக்கதான் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆங்கில வழிக்கு இல்லை. எதற்காக நான் ஆங்கில வழியில் பாடம் நடத்தவேண்டும். உங்களுக்கு என்று ஆசிரியர் வந்தால் அவர் நடத்துவார் என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் ஆங்கில வழி மாணவிகளை வகுப்பில் இருந்து வெளியேற்றி விட்டாராம், அந்த பெண் ஆசிரியை. இது குறித்து அறிந்த அந்த பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் கேட்கலாம் என்று சென்றால் பயோமெட்ரிக்கில் விரல் ரேகை வைத்துவிட்டு வருகையை பதிவு செய்துவிட்டு வீட்டுக்கு சென்று விடுகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

 • bangladeshtrain

  வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

 • wildfireaus

  காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

 • hongkongprofire

  ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

 • chicagosnow

  பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்