SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர் தங்கம்

2019-06-21@ 04:54:19

சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 பெரிய நகரங்களில் வரும் 2020 ஆண்டில் ‘தண்ணீர் தங்கம்’ எனப்படும் நிலத்தடி நீர் பெருமளவில் வற்றிவிடும்; இதனால் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதுதவிர வரும் 2030ம் ஆண்டில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு குடிநீரே கிடைக்காது என்றும் அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நிதி ஆயோக் சொல்லும் 2020க்கு இன்னும் சரியாக 6 மாதங்கள்தான் உள்ளன. அதைத்தொடர்ந்து நிலத்தடி நீர் சென்னையில் பெருமளவில் கீழே இறங்க ஆரம்பித்துவிடும். இப்போது குளிப்பதற்கு ஆவது, உப்பாக இருந்தாலும் நிலத்தடிநீர் பயன்படுகிறது. அடுத்த ஆண்டில் அதுவும் இருக்காது என்ற தகவல், பதைபதைக்க வைக்கிறது.

சென்னையில் மூன்று ஆறுகள், நான்கு நீர் நிலைகள், ஐந்து சதுப்பு நிலங்கள், 6 வனப்பகுதிகள் ஏற்கனவே கடும் வறட்சியில் சிக்கி உள்ளன. இத்தனைக்கும் சென்னையில் போதுமான அளவு மழை கிடைக்கிறது. ஆனால், அதை சரியாக பயன்படுத்தாததால், நீர்நிலைகள் வறண்டு, மக்களை பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது.சென்னையில் கடல் இருக்கிறது; அதை வைத்து குடிநீர் ஆக்கிவிடலாம் என்று சில மேதாவிகள் பேசுகின்றனர். ஆனால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்பது பெரும் செலவுக்குரிய ஒன்று. மேலும், சென்னை போன்ற பெருநகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கு குறைந்தபட்சம் 50க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் மையங்களை அமைக்க வேண்டும். ஆனால், நிஜத்தில் இது முடியுமா?இயற்கை அன்னை ஒவ்வொரு ஆண்டும், நமக்கு போதுமான அளவுக்கு மழை என்ற கொடையை அளிக்கிறது. ஆனால், அதை பாதுகாக்காமல் கடலில் கலக்க விட்டும், கால்வாய்களில் கலக்க விட்டும் அஜாக்கிரதையாக இருப்பதன் பலனைத்தான் இப்போது சென்னை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

அரசின் அஜாக்கிரதை ஒரு பக்கம் இருந்தாலும், மக்களும் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமிக்க தங்களால் முடிந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் மழைநீர் சேகரிப்புக்கான குழிகளை ஒவ்வொரு வீட்டிலும் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு முறை தண்ணீர் குடிக்கும்போதும், அடுத்த ஆண்டில் அது நமக்கு கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டிய நிலை உருவாகும். தங்கமாவது இருக்கும்; தண்்ணீர் தங்கம் இருக்காது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்