SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர்மேலாண்மை எங்கே?

2019-06-20@ 00:09:33

நீர் மேலாண்மையில் மிகச்சிறந்த மாநிலம் தமிழகம். ஏன் உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. பண்டைய காலம் தொட்டு நீர் மேலாண்மையில் அதிக அக்கறை காட்டியவர்கள் நமது முன்னோர்கள். அதனால் தான் எப்போதும் முப்போகம் காணும் விவசாய நிலங்களும், விவசாயமே பிரதான தொழிலாகவும் இருந்தது. இப்போது?... தவிக்கின்ற வாய்க்கு தண்ணீருக்கு வழியில்லை. தாய்மார்கள் காலி குடங்களுடன் வீதிவீதியாக அலைகின்ற நிலை. தூக்கத்தை தொலைத்து தண்ணீரைத்தேடி அலையும் கணவன்மார்கள். சென்னையின் நிலை இப்படி என்றால் பெருநகரங்கள், சிறுகிராமங்கள் எல்லாம் தண்ணீர் தேடி கண்ணீரால் துவண்டு போய் நிற்கின்றன. ஆனால் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கிறது தமிழக அரசு.

நெம்மேலி தண்ணீர் வருது, மீஞ்சூர் தண்ணீர் இருக்கு, வீராணம் தண்ணீர் வருது, மேட்டூர் தண்ணீர் கூட இருக்கு.. எங்கே தண்ணீர் தட்டுப்பாடு என்பது அவர்களின் வாதம். ஆனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அத்தனை ஏரிகளும் வறண்டு விட்டன என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை. போர்வெல்களில் இருந்து வெறும் காற்றுதான் வருகிறது. 9 ஆயிரம் லாரிகளை கொண்டு சப்ளை செய்தாலும் நீராதாரம் இருந்தால் தானே நீர் சப்ளை செய்ய முடியும்?. ஆறுகள், குளங்கள், ஏரிகள் அத்தனையும் பிளாட் போட்டு விற்றுவிட்டு, ஆக்ரமித்துவிட்டு தண்ணீர் எப்படி தேங்கும், நீர் நிலைகளில் எப்படி தங்கும்?. ஊருக்கு ஒரு கோயில். கோயிலுக்கு ஒரு குளம். குளத்திற்கு நீர் வரும் பாதை. பாதை இணைப்பு நீர் தரும் ஏரி என்று ஒரு மிகப்பெரிய நீர் வழித்தடத்தை தமிழகம் முழுவதும் நிறைவேற்றி இருந்தார்கள் நம் முன்னோர்கள். ஒரு ஏரி நிரம்ப, அதன் வழித்தடத்தில் உள்ள குளங்கள் நிரம்பி மறு ஏரி நிரம்பும். அத்தனையும் நிரம்பிய பின், மிச்சம் மீதி தண்ணீர்தான் கடல் சென்று சேரும். இப்போது...?

2015ல் சென்னையில் மிகப்பெரிய வெள்ளம். அத்தனை ஏரிகளும் நிரம்பி வழிந்தன. 2016ல் வறட்சி. 2017ல் 200 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் 200 மிமீ மழை. அதன்பின் 2018ல் வறட்சி. இப்போது கடும் குடிநீர்பஞ்சம். 2015ல் விழித்துக்கொண்டு உரிய முறையில் நீர் நிலை ஆக்ரமிப்புகளை அகற்றி, சிறந்த நீர்மேலாண்மை செய்து இருந்தால் இன்று தமிழகத்திற்கு இந்த நிலை வந்திருக்காது. நிலத்தடி நீர் வற்றியிருக்காது. இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ilavarsar_pakisthn111

  பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

 • kavan_manavai11

  அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

 • seuol_expooo1

  தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

 • pumbkin_comp111

  அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

 • bday_day11

  ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்