SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹேக்கர்களுக்கு பதிலடி கொடுக்க நிர்வாண படம் வெளியிட்ட நடிகை

2019-06-19@ 03:35:27

வாஷிங்டன்:  நிர்வாண படம் வெளியிடுவோம் என்று நடிகையை மிரட்டிய ஹேக்கர்களுக்கு தனது நிர்வாண படத்தை தானே வெளியிட்டு பதிலடி தந்திருக்கிறார்  ஹாலிவுட் நடிகை.மிட்நைட் சன், தி பேபி சிஸ்டர் உள்ளிட்ட பல்வேறு  ஹாலிவுட் மற்றும் ஹாலிவுட் டிவி சீரியல்களில் நடித்திருப்பவர் பெல்லா  தோர்ன். இவரது இணையதள பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி, அதில் பெல்லா தோர்ன்  வைத்திருந்த அந்தரங்க  படங்கள், நிர்வாண மற்றும் டாப்லெஸ் படங்களை  திருடினர். பிறகு அவருக்கு போன் செய்து நாங்கள் கேட்கும் பணத்தை  கொடுக்காவிட்டால் உனது நிர்வாண படத்தை நெட்டில் வெளியிடுவோம் என்று  மிரட்டினர்.

இதில் கடுப்பான பெல்லா, ‘நீ என்ன என்னை மிரட்டுவது, உன்னால்  என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய நிர்வாண படத்தை வைத்துக்கொண்டு  என்னையே மிரட்டுகிறாயா? அவைகளை ஸ்பெஷல் நபர்கள் பார்வைக்கு மட்டும்   வைத்திருந்தேன். உன்னால் அந்த எண்ணம் சிதைந்துவிட்டது. முட்டாளே, மிரட்டி  என்னை பணிய வைக்க உன்னால் (ஹேக்கர்ஸ்) முடியாது’ என்று கடுமையாக கோபத்தை  வெளிப்படுத்தியதுடன், ‘நீ என்ன என்னுடைய நிர்வாண படத்தை  ெவளியிடுவது நானே  வெளியிடுகிறேன்’ என்று தனது டாப்லெஸ் படம் உள்ளிட்ட படுகவர்ச்சியான படங்களை  பெல்லா தோர்ன் வெளியிட்டார். இதைப் பார்த்து ஹேக்கர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்