SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..! ‎

2019-06-18@ 15:05:47

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகேவுள்ள வேல்வியூ பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை ஒன்று தனது இரு குட்டிகளுடன் வந்து செல்வதாக கூறப்படுகிறது. அண்மையில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளுக்கிடையே நுழைந்து, ஆடு ஒன்றை கடித்து குதறியது.

அதனை பார்த்த மக்கள் கூச்சலிட்டு தடுத்ததை அடுத்து, அந்த ஆட்டை சிறுத்தை படுகாயங்களுடன் விட்டு சிறுத்தை தப்பி சென்றது. இந்நிலையில் இதுவரை 25 ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. ஆடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்கு முன் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்கும்படி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்