SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு 104 குழந்தைகள் உயிரிழப்பு... தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

2019-06-18@ 08:51:45

பாட்னா: பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்கக் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு 104 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடும் வெப்பம் காரணமாக பீகாரில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிட்ஸ்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன.மேலும் மண்டையை பிளக்கும் வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் அம்மாநிலத்திலும் பலர் மரணம் அடைந்துள்ளனர்.

தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்திக் கொண்டு,ஏற்கனவே கடந்த 9-ம் தேதி வரை அங்கு பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்து தானாக வழக்கை எடுத்துக் கொண்ட தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பீகார் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    24-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்