SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி நிர்வாகத்திடம் வெயிட்டாக கறக்கும் கல்வி அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-06-18@ 04:32:09

‘‘என்ன தண்ணீர் பிரச்னையே சென்னையில இல்லை என்பதுபோல இரண்டு விவிஐபிக்கள் இருக்காங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஒருவர் இப்போதுதான் டெல்லிக்கு போய் டீலிங் முடிச்சுட்டு வந்து இருக்கார். அவருக்கு பாசிட்டிவான பதில் கிடைச்சு இருக்கு. அதனால இன்னும் சில வாரங்களில் மானியக்கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடக்க வாய்ப்பு இருப்பதாக  தகவல்கள் வெளியாகி இருக்கு. இப்போது நீ கேட்ட தண்ணீர் பிரச்னைக்கு வர்றேன். சென்னையில் தண்ணீர் பிரச்னையை மீடியாக்கள் தான் பெரிது பண்றதா அமைச்சர் ஒருத்தர் உளறி தள்ளி இருக்காரு... அவரை வடசென்னை, தென்சென்னை  பக்கம் மாறுவேடத்தில் ெசன்று தண்ணீர் பிரச்னையை விசாரிக்க சொல்லுங்க... அவங்கள என்னமா மக்கள் கடிச்சு துப்பறாங்கனு தெரியும் என்று அவருடன் இருக்கும் அடிப்பொடிகளே சொல்றாங்க... சேலம்காரரோ தண்ணீர் பிரச்னையை  தீர்ப்பதில் ஆர்வம் இல்லாததுபோலவே இருக்கிறார். எம்எல்ஏக்கள், எம்பிக்களை சரிகட்டுவதில்தான் அவரது கவனம் இருப்பதாக சில மக்கள் பிரதிநிதிகளே சொல்றாங்க... கேட்டதற்கு ஏரி, குளம், குட்டையை ஆக்கிரமித்து இருக்காங்க... காலி  செய்ய சொன்னா கோர்ட்டுக்கு போறாங்க... இப்போது தண்ணீர் வரவில்லை என்றால் எப்படி வரும் என்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தமிழகமே தாகத்தில் தவிக்கும்போது நிதி கொடுக்கவேண்டியவரு சென்னை பக்கமே எட்டி பார்க்கல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம் எனக்கும் அந்த வகையில வருத்தம்தான். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை இருந்தும் ஆயுர்வேத  சிகிச்ைசக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சொல்றாங்க... நிதியை விடுவித்து, நீர் நிலைகளை கண்காணித்து மக்களின் தாகத்தை போக்க வேண்டியவர். அரசியல் காரணங்களுக்காக மக்களின் தாகத்தை தணிக்காமல்  சேலம்காரருடன் மோதுவது எந்த விதத்தில் நியாயம். ஓட்டு மாறி போட்டதால் தேனி, சேலமும் சென்னை வாசிகளை தண்ணீர் கொடுக்காமல் கண்ணீரில் தவிக்க விடுறாங்களா என்று சென்னை வாசிகள் ஓபனாகவே பேசிக்கிறாங்க...’’ என்றார்  விக்கியானந்தா.‘‘நீட் தேர்வில் கல்வி அமைச்சர் சொன்னது நடக்கலை போல..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நீட் தேர்வில் தமிழக அரசு தனியாருடன் கைகோர்த்து வகுப்பை ஜோராக ஆரம்பித்தது உண்மைதான். சில வாரங்களே நடந்த நிலையில் நிதிப்பிரச்னை...  ஆசிரியர்கள் பிரச்னை என்று நீட் வகுப்புகளே சில நாட்கள் தான் நடந்ததாம். அதிலும் பாதி நாட்கள் நடக்கவே இல்லையாம். அமைச்சரின் அறிவிப்பு எல்லாம் பேட்டியிலும், அரசு உத்தரவு என்ற வகையில் தான் நடக்கிறதாம். உண்மையில் நீட்  தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பின்னடைவுக்கு தமிழக அரசின் அதிகப்படியான நம்பிக்கையை மாணவர்கள், பெற்றோரிடம் ஏற்படுத்திவிட்டு, அதை ஒழுங்காக செய்யாமலும் நீட் வகுப்புகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதை  கண்காணிக்காமலும் விட்டதால் மாணவர்கள், மாணவிகள் தனியார் கோச்சிங் சென்டருக்கு கடைசி நேரத்தில் சென்று சேர்ந்தனர். அவர்களில் கூட பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை... அப்புறம் இன்னொன்றையும் சொல்கிறேன்..  பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு முக்கியமான வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லையாம்.

ஓய்வுபெறப்போகிறவர் லாங் லீவில் சென்றுவிட்டார்கள். பாட ஆசிரியர்களும் சிஇஓ மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு பயந்து பாடம்  நடத்தாமல் நடத்தியதாக நோட்டில் எழுதி வரச் சொன்னார்களாம். அதன் பிறகு பாடம் நடத்துவார்கள் என்று நினைத்தால் அந்த பாடத்தையும் நடத்தவில்லையாம். இது எல்லாம் கல்வி அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா... தெரிந்து  நடக்கிறதா என்பது கல்வித்துறைக்கே வெளிச்சம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ பூட்டு மாவட்டத்துல கல்வித்துறையில என்ன பிரச்னை..’’ என்றார் பீட்டர் மாமா.
‘ திண்டுக்கல் மாவட்டத்துல உள்ள மாவட்ட தலைமை கல்வி அதிகாரி, உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திடம் ‘வெயிட்டாக’ வசூல் செய்து விடுகிறாராம்... காலிப்பணியிடத்தை நிரப்ப கோரிக்கை  வைக்கும் உதவி பெறும் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் விபரங்களை ஆய்வு செய்து பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டுமாம்... ஆனால் பள்ளிக்கே வராமல், கவனிப்பை பெற்றுக் கொண்டு  வருகை பதிவை அலுவலகத்திற்கு கொண்டு வரச்செய்து கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கி விடுகிறாராம்...  சமீபத்தில் பழநியில் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் தனியார் கல்வி நிறுவனங்களின் கவனிப்புகளை  பெற்றுக் கொண்டு வருடாந்திர அங்கீகார அனுமதி உத்தரவை வழங்கி உள்ளாராம்... இதுதாம்பா கல்வித்துறையில உள்ள வளர்ச்சி...’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.‘‘வீட்ல இருந்துக்கொண்டே வசூலை குவிக்கும் அதிகாரியை பற்றி  சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ தேனி மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரி ‘தந்தை - மகன் கடவுள்’ பெயர் கொண்டவரு... இவர் சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவராம்... அங்கிருந்து பணிமாறுதலில் தேனி மாவட்டத்திற்கு வந்திருக்காரு... ஆனால் சொந்த ஊரு, வீடு  வாசல் சேலம் மாவட்டத்துல இருக்கிறதால, வாரம் 2 நாள் மட்டும்தான் தேனி மாவட்டத்திற்கு விசிட் அடிப்பாராம்... வந்தாலும் ஒரு சில மணி நேரங்களில் எஸ்கேப் ஆகி விடுவாராம்... இதனால் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின்  செயல்பாடுகள் முடங்கி கிடக்காம்... இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் ‛வசூலில்’ குறியாக இருக்காங்களாம்...  தற்போது கூட துணைப்பதிவாளர் பணி மாறுதல், பதவி உயர்வு, புதிய சம்பள நிர்ணயம், ஓய்வு  அனுமதி என எல்லாவற்றுக்கும் பல லட்சங்களை வாரி வசூலிக்கும் பணி நடந்து வருகிறதாம்... தனக்கு வர வேண்டிய ‘அமவுண்ட்’ வருதா... அது போதும்’ என்று சொந்த ஊர்லயே உட்கார்ந்து கிடக்காராம்... இப்படி ஒரு பொற்காலம் இனி  அமையுமா என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ‘கரன்சி மழையில்’ நனையுறாங்களாம்...’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்